‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி |

மலையாள திரையுலகின் மூத்த எழுத்தாளரும், பிரபல இயக்குனருமான எம்டி வாசுதேவன் நாயர் தனது வயோதிகம் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 91. திரை உலகை சேர்ந்த பலரும் அவருக்கு தங்களது இரங்கல்களையும் இறுதி அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர். எம்டி வாசுதேவன் நாயரின் பல நாவல்கள் மற்றும் சிறுகதைகள் பெருமளவில் திரைப்படங்களாக மாறி இருக்கின்றன. அந்த வகையில் மகாபாரத கதையை அடிப்படையாகக் கொண்டு அவர் எழுதிய ரெண்டாம் மூழம் என்கிற நாவல் கடந்த பல வருடங்களாகவே திரைப்படமாக்கும் முயற்சியில் இருந்து வந்தது.
மகாபாரத கதாபாத்திரங்களில் பீமனின் கண்ணோட்டத்தில் இந்த கதையை விவரிப்பதாக எழுதியிருந்தார் எம்டி வாசுதேவன் நாயர். இதில் நடிகர் மோகன்லால் பீமனாக நடிப்பதாக இருந்தது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு அரபு நாட்டைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் இந்த படத்தை மகாபாரதம் என்கிற டைட்டிலில் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் தயாரிப்பதற்கு முன் வந்தார். பிரமாண்ட அறிவிப்பும் வெளியானது. மோகன்லாலை வைத்து ஓடியன் என்கிற படத்தை இயக்கிய ஸ்ரீகுமார் மேனன் என்பவர்தான் இந்த படத்தை இயக்குவதாக இருந்தது.
ஆனால் தனது ஸ்கிரிப்ட்டை சொன்ன நாட்களில் பயன்படுத்தவில்லை, படத்தை துவங்கவில்லை என்று கூறி இந்த கதையை படமாக்க கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தன நாவலை திரும்ப பெற்றார் எம்டி வாசுதேவன் நாயர். அதனால் இந்த படம் அப்படியே கைவிடப்பட்டது. அதேசமயம் அவர் எழுதிய 10 சிறுகதைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனோரதங்கள் என்கிற பெயரில் ஒரு ஆந்த்ராலஜி படமாக மோகன்லால், மம்முட்டி, கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்க ஒரு திரைப்படமாக உருவானது கொஞ்சம் ஆறுதலான விஷயம்.