பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
நடிகர் பிருத்விராஜ் முதன்முறையாக டைரக்ஷன் துறையில் அடி எடுத்து வைத்து மோகன்லால் வைத்து கடந்த 2019ல் இயக்கிய படம் 'லூசிபர்'. அரசியல் பின்னணியில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது பிருத்விராஜ் தற்போது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக 'எம்புரான்' படத்தை இயக்கி முடித்துவிட்டார். மோகன்லாலை முதன்முறையாக 'மனசில் விரிஞ்ச பூக்கள்' என்கிற படத்தில் அறிமுகப்படுத்திய பிரபல இயக்குனர் பாசில், முதல் பாகத்தில் பாதர் நெடும்பள்ளி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது மோகன்லால் இயக்குனர் பாசில் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும்போது, “என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் எனது குருநாதர் பாசில். அவரது குடும்பத்திற்கும் எனது குடும்பத்திற்கும் கிட்டத்தட்ட 40 வருடத்திற்கு மேலாக நெருங்கிய உறவு நீடித்து வருகிறது. அவர் இயக்கத்தில் நான் பல படங்களில் நடித்து விட்டேன். அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசை லூசிபர் படத்தில் நிறைவேறியது. தற்போது அதன் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள எம்புரான் படத்தில் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு நானும் அவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தோம். அவருடன் மீண்டும் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.