விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
மலையாள திரையுலகில் பிரபல கதாசிரியர், இயக்குனர் எம்டி வாசுதேவன் நாயர், 91 உடல்நலக் குறைவால் காலமானார்.
சில தினங்களுக்கு முன் எம்டி வாசுதேவனுக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் இருந்து வந்த அவரது உயிர் சிகிச்சை பலன் இன்றி பிரிந்தது.
1933ல் கேரள மாநிலம் கூடலூர் உள்ள கிராமத்தில் பிறந்தார் எம்டி வாசுதேவன் நாயர். கல்லூரியில் வேதியியல் படித்த அவர், சிறு வயது முதலே எழுத்தில் ஆர்வம் கொண்டார். பின்னர் அவர் பிரபல வார இதழில் பணிக்கு சேர்ந்தார். பல நாவல்கள், சிறுகதைகள் தொகுப்புகள் என எழுத்தாளராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். தனது 23 வயதிலேயே நாலு கேட்டு என்கிற நாவலை எழுதி அதற்காக கேரள சாகித்ய அகாடமி விருது பெற்றார். அதன் பிறகு 1965ல் முறப்பெண்ணு என்கிற படத்திற்கு கதை எழுதியதன் மூலமாக சினிமாவிலும் அடி எடுத்து வைத்தார்.
மம்முட்டி, மோகன்லால், பிரேம் நசீர் உள்ளிட்ட பலர் இவரது கதைகளை தழுவி உருவான படங்களில் நடித்து பிரபலமானார்கள். 1973-ல் நிர்மாலயம் என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் அடி எடுத்து வைத்த இவர் ஆறு படங்களை இயக்கியுள்ளார்.
அதுமட்டுமல்ல 1989ல் மம்முட்டி நடிப்பில் வெளியான ஒரு வடக்கன் வீர கதா என்கிற படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதையும் இவர் பெற்றுள்ளார். வரலாற்று கதைகளை எழுதுவதில் இவர் வித்தகரும் கூட. அதற்கு பழசிராஜா திரைப்படத்தை இன்னொரு உதாரணமாக கூறலாம்.
சமீபத்தில் கூட இவரது எழுத்தில் உருவான 10 சிறுகதைகளை ஒரு ஆந்தாலஜி படமாக உருவாக்கி மனோரதங்கள் என்கிற பெயரில் வெளியிட்டனர். இதில் மோகன்லால், மம்முட்டி, பஹத் பாசில் உள்ளிட்ட பல பிரபலங்கள் ஒவ்வொரு கதையிலும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
9 நாவல்கள், 19 கதைகள், 6 திரைப்படங்கள், 54 படங்களுக்கு திரைக்கதை எழுதி உள்ளார். 21 முறை மாநில அரசு விருதுகள், 7 தேசிய விருதுகள் மற்றும் ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். இந்திய அரசின் உயரிய பத்மபூஷண் விருதையும் வென்றுள்ளார்.