பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

மலையாள திரையுலகில் புலனாய்வு திரைப்படங்கள் அதிக அளவில் வெளியாகி வருகின்றன. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு வித்தியாசமான கோணத்தில் உருவாக்கப்பட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான பாரன்சிக் திரைப்படம் பாரன்சிக் துறை அடிப்படையிலான புலனாய்வு கிரைம் திரில்லர் படமாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அந்த படத்தை இயக்குனர்கள் அனாஸ்கான் மற்றும் அகில்பால் என்கிற இரட்டையர்கள் இயக்கியிருந்தனர். அந்த வெற்றியை தொடர்ந்து அவர்கள் மீண்டும் நடிகர் தாமஸை வைத்து தற்போது ஐடென்டிடி என்கிற படத்தை இயக்கி வருகின்றனர்.
இந்தப் படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். வில்லனாக நடிகர் வினய் ராய் நடித்துள்ளார். கிட்டத்தட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ் நோக்கி பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இதில் சாட்சிகள் சொல்லும் அடையாளங்களை வைத்து குற்றவாளிகளை வரையும் ஓவியராக காவல்துறையில் பணியாற்றும் நபராக டொவினோ தாமஸ் நடித்துள்ளார். அப்படி திரிஷா சொல்லும் அடையாளங்களுடன் ஒருவரை அவர் வரைவதாக இந்த டீசர் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த டீசரை பார்த்து விட்டு நடிகர் கார்த்தி, “மிகவும் உற்சாகமாக இருக்கிறது. குட் லக்” என்று தனது மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் டொவினோ தாமஸ் உள்ளிட்ட ஐடென்டிடி படக்குழுவினருக்கு அங்கு தெரிவித்துள்ளார். நடிகர் டொவினோ தாமஸும் கார்த்திக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.




