மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
தீபாவளி படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு ஸ்பெஷல்தான். ஆனால் சில நேரங்களில் தீபாவளி படங்கள் சில ஆச்சர்யங்களை நிகழ்த்திவிட்டுப்போகும். அதில் ஒன்றுதான் இயக்குனர் கே.பாக்யராஜ் ஒரு தீபாவளி நாளில் தனது குருநாதன் பாரதிராஜா, கமல்ஹாசன், ரஜினிகாந்தை வீழ்த்தி சாதனை படைத்தது.
1981ம் ஆண்டு தீபாவளி அன்று இயக்குனர் கே.பாலசந்தரின் 'தண்ணீர் தண்ணீர்', சிவாஜி, சரிதா, சரத்பாபு, ஜெய்சங்கர் நடிப்பில் உருவான 'கீழ்வானம் சிவக்கும்', ரஜினி, ஸ்ரீதேவி, சிரஞ்சீவி நடித்த 'ராணுவ வீரன்', இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில், கமல், மாதவி, ராதா, ஸ்வப்னா நடித்த 'டிக்... டிக்... டிக்...', தேவர் பிலிம்ஸின் 'அஞ்சாத நெஞ்சங்கள்', ஆர்.சி.சக்தியின் இயக்கத்தில், சந்திரசேகர், விஜயசாந்தி நடித்த 'ராஜாங்கம்', பாக்யராஜ் நடித்து இயக்கி, அம்பிகா, ராஜேஷ், கல்லாபெட்டி சிங்காரம் முதலானோர் நடித்த 'அந்த ஏழு நாட்கள்' ஆகிய படங்கள் வெளியாகின.
இரு பெரும் சாதனையார்களான பாரதிராஜா, கே.பாலச்சந்தர், சூப்பர் ஸ்டார்களான ரஜினி, கமல் படங்கள் இவற்றோடு ஒரு சின்ன கதை, புதுமுகங்கள் இவற்றோடு வந்தது 'அந்த 7 நாட்கள்'. தீபாளியன்று வெளியான இந்த படங்களில் 'ராஜாங்கம்' தவிர மற்ற அனைத்து படங்களுமே வெற்றி பெற்றது. என்றாலும் அனைத்து படங்களிலும் 'அந்த 7 நாட்கள்' வசூலில் சாதனை படைத்து, வெள்ளி விழாவும் கொண்டாடியது.