ஏ.ஆர்.ரஹ்மான் குழுவிலிருந்த பெண் 'கிடாரிஸ்ட்' விவாகரத்து | மம்முட்டி, மோகன்லால் இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | 30 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷா ஜப்பான் பயணம் | பிளாஷ்பேக்: 40 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீமேக் ஆன தெலுங்கு படம் | மொபைல் எண் விவகாரம் : 'அமரன்' குழுவுக்கு மாணவர் நோட்டீஸ் | 'ஏஞ்சல்' பட விவகாரம்: உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக்: திடீர் வில்லன் ஆன எம்.ஜி.ஆர் | அமராவதியில் 'கேம் சேஞ்சர்' விழா : பவன் கல்யாண் வருவாரா? | 'சிறகடிக்க ஆசை' கோமதி ப்ரியா க்யூட் கிளிக்ஸ் | ஜிவி பிரகாஷ் இசை நிகழ்ச்சியில் பாடப் போகும் சைந்தவி |
இங்கிலீஸ்காரன், சார்லி சாப்ளின் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ஷக்தி சிதம்பரம் தற்போது இயக்கி உள்ள படம் 'ஜாலியோ ஜிம்கானா'. இதில் பிரபுதேவா, மடோனா செபாஸ்டின், அபிராமி, யாஷிகா ஆனந்த், யோகி பாபு, ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் இடம்பெறும் 'போலீஸ்காரன கட்டிக்கிட்டா' என்ற பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. படம் வருகிற 22ம் தேதி வெளியாகிறது. டிரான்ஸ் இந்தியா மீடியா சார்பில் ராஜேந்திர ராஜன் தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் சில பாடல்களை படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றிய ஜெகன் கவிராஜ் என்பவர் எழுதி உள்ளார். அதில் 'போலீஸ்காரன கட்டிக்கிட்டா...' என்ற பாடலும் ஒன்று. இவர் ஏற்கெனவே வேறு சில படங்களிலும் பாடல் எழுதி உள்ளார். ஆனால் படத் தயாரிப்பின்போது இயக்குனர் ஷக்தி சிதம்பரத்திற்கும், ஜெகன் கவிராஜுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அனைத்து பாடல்களையும் தானே எழுதியதாக ஷக்தி சிதம்பரம் தனது பெயரை போட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் படத்தின் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே “ஜெகன் கவிராஜ் எழுதிய பாடலுக்கு உங்கள் பெயரை எப்படி போட்டுக் கொள்ளலாம்” என்று சிலர் குரல் எழுப்பினர். இதை தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் “நிகழ்ச்சி முதலில் நடக்கட்டும் பின்னர் நீங்கள் இயக்குனரிடம் இதுபற்றி கேட்கலாம்” என்று கூறி சமாதானம் செய்தார். இதை தொடர்ந்து விழா முடியும் தருவாயில் மீண்டும் இந்த விஷயம் தொடர்பாக கேள்வி எழுப்பியதும், இயக்குனர் ஷக்தி சிதம்பரம் நிகழ்ச்சியை விட்டு வேகமாக வெளியேறி விட்டார்.
இதை தொடர்ந்து பேசிய ஜெகன் கவிராஜ் “ஒரு மலையாள படத்தில் இடம்பெற்ற பாடலை இன்ஸ்பிரேஷனாக கொண்டு போலீஸ்காரன கட்டிகிட்டா பாடலை எழுதினேன், மேலும் 3 பாடல்களை இந்த படத்திற்காக எழுதினேன், மற்ற நான்கு பாடல்களை ஷக்தி சிதம்பரம் எழுதினார். ஆனால் எல்லா பாடல்களையும் தானே எழுதியதாக அவர் பெயரை போட்டுக் கொண்டார். நான் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றியதால் என்னால் படத்திற்கு எதுவும் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக நான் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. தயாரிப்பாளர் என்ன முடிவு செய்கிறாரோ அதுவே என் முடிவும்” என்றார்.
பின்னர் பேசிய பிரபுதேவா “யார் செய்தாலும் தவறு தவறுதான். என்ன நடந்தது என்பது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் இந்த பிரச்னையை இந்த நிகழ்ச்சியில் எழுப்பியிருக்க வேண்டியதில்லை. தயாரிப்பாளரையோ, இயக்குனரையோ நேரில் சந்தித்து பேசி இருக்கலாம்” என்றார்.