ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நாளை மறுநாள் (22ம் தேதி) வெளிவர இருக்கும் படம் 'தூவல்'. இந்த படத்தை புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ளனர். ராஜ்குமார், சாந்தா, சிவம், மாஸ்டர் நிவாஸ், இளையா, ராஜ்வேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜவேல் கிருஷ்ணா இயக்கி உள்ளார். சதீஷ் இசை அமைத்துள்ளார், தர்வேஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா கூறும்போது “ஒக்கேனக்கல் பகுதியில் ஆற்றில் மீன் பிடித்து வாழும் ஆற்று மீனவர்கள் பற்றிய கதை. வயலுக்கு வரப்பு போன்று ஆற்றிலும் கற்களை கொண்டு தனி தனி குடும்பங்களுக்கு தனித்தனி பகுதி ஒதுக்கி மீன் பிடிக்கும் கதை. நேராக ஓடி வரும் ஆறு ஒரு குறிப்பிட்ட பகுதியில் சிறு சிறு அருவிகாக மாறும். இந்த சிற்றருவிகளைத்தான் 'தூவல்' என்கிறார்கள். இந்த தொழிலும், தொழில் சார்ந்த பிரச்னைகளையும் பேசும் படம் இது. தமிழ் சினிமாவிற்கு இது புதிய கதை களமாகும்” என்றார்.