'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா | 'டிமான்டி காலனி 3' பணியில் அஜய் ஞானமுத்து! | ரூ.25 கோடிக்கு பிஸ்னஸ் ஆன 'பேடி' பட ஆடியோ உரிமை | உடை மாற்றும் போது அத்துமீறிய இயக்குனர்! - ஷாலினி பாண்டே | 'ரெய்டு 2' படத்தில் சிறப்பு பாடலில் தமன்னா! | 'சாரி' கவர்ச்சி படமல்ல, கருத்து படம்: ராம் கோபால் வர்மா | பிளாஷ்பேக் ; ஒரே ஆண்டில் 15 படங்கள், ஒரே நாளில் 3 படங்கள் : மோகன் சாதனை | பிளாஷ்பேக் : மனைவியை தமிழில் அறிமுகப்படுத்திய தெலுங்கு இயக்குனர் | வடிவேலு இறங்கி வருவார்... என் ஒரு கோடி இன்னமும் அவரிடம் தான் உள்ளது : ஆர்கே | பிளாஷ்பேக்: இலக்கிய தமிழில் உரையாடல் இருந்தும் இலக்கைத் தவறவிட்ட “துளி விஷம்” |
சமூகவலைதளங்களின் தாக்கம் அதிகமான பின்னர் சினிமா படங்கள் தொடர்பான விமர்சனங்கள் படங்களை தாண்டி தனிமனித தாக்குதல் வரை எல்லை மீறி செல்கின்றன. முதல்காட்சி முடிந்ததும் படத்தை பற்றி நெகட்டிவ் விமர்சனங்கள் நிறைய வருவதால் சினிமா துறையினர் புலம்பி வருகின்றனர். இந்தியன் 2 துவங்கி சமீபத்தில் வந்த கங்குவா படம் வரை இது தொடர்ந்தது. இதனால் அந்த படங்களின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இருதினங்களுக்கு முன் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட ஆடியோ பதிவில், ''தமிழகத்தில் காலை 9 மணிக்குதான் சிறப்பு காட்சி நடக்கிறது. அதேநேரத்தில்தான் மற்ற மாநிலங்களில் சிறப்பு காட்சிகள் ஆரம்பமாக வேண்டும். அடுத்ததாக, படம் வெளியாகி இரண்டு வாரங்களுக்குள் யாரும் விமர்சனம் செய்ய கூடாது என நீதிமன்றத்தை அணுகி தடை வாங்க வேண்டும்'' என தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் ‛‛திரைப்பட விமர்சனம் என்கிற பெயரில் தனிமனித தாக்குதல் மற்றும் வன்மத்தை விதைக்ககூடாது'' என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்,
திரைப்படங்களை விமர்சிக்க அனைவருக்கு உரிமை உள்ளது. திரைத்துறை விமர்சகர்கள் தராசு போல ஒரு திரைப்படத்தின் நிறை குறைகளை சொல்லி, மொத்தத்தில் தங்களின் அபிப்பிராயத்தை சொல்லலாமே தவிர, அதை ஒட்டுமொத்தமாக ஒழிக்கும் விதத்தில் கடுமையாக விமர்சனம் செய்து, தனிமனித தாக்குதல்களும் செய்வது, திரைப்பட துறையை மொத்தமாக அழிக்கும் செயலாகும்.
முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன், பார்வையாளர்களின் கருத்துக்களை பதிவு செய்து வரும் பல யுடியூப் சேனல்கள், எல்லை மீறி கருத்துக்களை சொல்லும் பார்வையாளர்களை ஊக்குவித்து, அதை தொடர்ந்து வெளியிட்டு, அத்தகைய கருத்துக்களை, ஏதோ அனைத்து பார்வையாளர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உலக அளவில் அதை எடுத்து செல்வது மிகவும் கண்டிக்கதக்கது.
யுடியூப் சேனல்களில் பதிவு செய்யும் முறை வந்த பின், பல பார்வையாளர்கள் இத்தகைய வீடியோக்கள் மூலம் பிரபலம் அடைய தன்னை திரைத்துறை மேதாவியாக நினைத்து பேசி வருவதும், ஏதோ அத்திரைப்படம், அவரின் மொத்த நிம்மதியையே குலைத்து விட்டது போல பேசி பிரபலம் அடைய முயற்சிக்கிறார்கள். சினிமா துறையை ஒட்டுமொத்தமாக அழிக்கும் இந்த செயல்களை உடனே தடுத்து நிறுத்து வேண்டிய கட்டாயம் திரைத்துறையை சார்ந்த அனைவருக்கும் உள்ளது.
பார்வையாளர்கள்/ரசிகர்கள், தங்களின் இத்தகைய வன்மம் மிகுந்த கருத்துக்கள், எவ்வாறு பெருமளவில் பாதிப்பை திரைத்துறைக்கு ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்து, பொறுப்பான முறையில் விமர்சனங்களை வரும்காலத்தில் சொல்வார்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம். மேலும் திரைப்படங்களை தார்மீக முறையில் விமர்சிக்காமல், தனிமனித தாக்குதல்கள், வன்மத்தை கக்குத்தல் போன்ற செயல்களை ஊடகங்கள் மூலம் செய்யும் நபர்கள்/ரசிகர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க சங்கம் அனைத்து முயற்சிகளையும் எடுக்கவிருக்கிறது.
Public Review/Talk மூலம் பெருமளவில் பாதிப்பை யுடியூப் சேனல்களை இனிமேல் ஊக்குவிக்காமல், திரைத்துறையை சார்ந்த அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து இந்த முறையை தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதன் முதல் முயற்சியாக, அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் ரசிகர்களின் பேட்டியை தங்கள் வளாகங்கள் மற்றும் வளாகத்தின் அருகில் எந்த யுடியூப் சேனல்களும் எடுக்க தடை செய்து, இந்த FDFS Public Review/Talk நடைமுறையை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.