சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் | கதை நாயகன் ஆன இயக்குனர் ஜெகன் | கராத்தே ஹுசைனிக்கு தமிழக அரசு 5 லட்சம் உதவி | பிளாஷ்பேக்: மோசமான தோல்வியை சந்தித்த ரஜினி படம் | பிளாஷ்பேக் : கிருஷ்ணராக நடித்த நடிகை |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள 'புஷ்பா 2' படம் அடுத்த மாதம் டிசம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. 2021ல் வெளிவந்த முதல் பாகத்தை விடவும் இந்த இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இதனிடையே, 'புஷ்பா 2' படத்தின் பின்னணி இசையை தேவி ஸ்ரீ பிரசாத் அமைக்கவில்லை என்று கடந்த வாரம் சர்ச்சையான தகவல்கள் வெளிவந்தது. அவருக்குப் பதிலாக தமன், அஜனீஷ் லோகநாத் இசையமைத்து வருகிறார்கள் என்று சொல்லப்பட்டது. இசை நிகழ்ச்சி ஒன்றில் “புஷ்பா 2, வேலைகள் காத்திருக்கிறது,” என தமன் பேசியதை அடுத்து அவர் அந்த பின்னணி இசை வேலைகளில் உள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதனிடையே, கடந்த ஐந்து நாட்களாக 'புஷ்பா 2' படம் சம்பந்தமான எந்த ஒரு சமூக வலைத்தளப் பதிவுகளையும் தேவி ஸ்ரீ பிரசாத் அவருடைய தளங்களில் பதிவு செய்யவில்லை. அதே சமயம், அவர் இசையமைத்துள்ள 'கங்குவா' படம் குறித்த பதிவுகளைத் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.
'புஷ்பா 2' பாடல்களுக்கு மட்டும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தாலும், படத்தில் உள்ள 'ஐட்டம்' பாடல் ஒன்றிற்கு நடிகை ஸ்ரீலீலா நடனமாடுகிறார் என்ற அறிவிப்பைக் கூட தேவி ஸ்ரீ கண்டு கொள்ளவில்லை. இதன் மூலம் 'புஷ்பா 2' குழுவினர் மீது அவர் எவ்வளவு கோபத்தில் உள்ளார் என்பது தெரிய வருகிறது.
இனி 'புஷ்பா 2' படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.