மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

தென்னிந்திய அளவில் பிரபலமாக தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா இளம் ரசிகர்களை அதிகம் பெற்றவர். கடந்த வருடம் வெளியான குஷி படம் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. ஆனால் இந்த வருடம் வெளியான ‛பேமிலி ஸ்டார்' இவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் தற்போது தனது 12வது படமாக கவுதம் தின்னனுரி இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய் தேவரகொண்டா. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப நாட்களாக கேரளாவில் நடைபெற்று வந்தது. இந்த படம் 2025 மார்ச்-28ல் வெளியாக இருக்கிறது.
இன்னொரு பக்கம் சர்ப்ரைஸ் ஆக சாஹிபா என்கிற ஆல்பத்திலும் நடித்துள்ளார் விஜய் தேவரகொண்டா. இவருடன் இணைந்து ஜஸ்லீன் ராயல் மற்றும் ராதிகா மதன் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். இந்த ஆல்பம் வெளியீட்டுக்கான புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக மும்பை வந்த விஜய் தேவரகொண்டா விழா நடக்கும் அரங்கிற்கு வந்த சமயத்தில் அங்கிருந்த படிகளில் இறங்கும்போது திடீரென கால் ஸ்லிப் ஆகி படிகளில் சறுக்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அவரை தூக்கினார்கள். இருப்பினும் பெரிய அளவில் காயம் எதுவும் அவருக்கு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கிளம்பிச் சென்றார் விஜய் தேவரகொண்டா.