'மெட்ராஸ்காரன்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் | பிளாஷ்பேக்: அண்ணன் தங்கை பாசம் பேசி, அழியா புகழ் வசனகர்த்தாவான ஆரூர் தாஸ் | சூர்யா 45 படத்திலிருந்து ஏஆர் ரஹ்மான் விலகல் | சோஷியல் மீடியா ட்ரோலில் பாதிக்கப்படுவது நடிகைகள் தான் - வாணி போஜன் | மீண்டும் சீரியலில் 'மோதலும் காதலும்' சமீர்! | இந்தியாவில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த டாப் 10 படங்கள் எது தெரியுமா...? | புதிய கார் வாங்கிய ஸ்வாதி கொன்டே! | ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் அணிலா! | தமன்னாவின் நடனத்திற்கு தடை போட்ட ஹரிஹரன்-சங்கர் மகாதேவன் அன் கோ | இவர்தான் பஹத் பாசிலா ? 'புஷ்பா 2' பார்த்த நடிகைக்கு வந்த சந்தேகம் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜெயிலர், வேட்டையன் படத்தின் வெற்றிகளை தொடர்ந்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரு மடங்கு உள்ளது. இந்த படத்தில் ஏற்கனவே அமீர்கான், நாகார்ஜுனா, சவ்பின் சாஹிர், உபேந்திரா என இதுவரை ரஜினியுடன் இணைந்து நடித்த பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் கூலி படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் சென்றிருந்தார். அதனால் அவரும் இந்த படத்தில் நடிக்கிறாரோ என்கிற ஒரு எண்ணம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது. சமீபத்தில் அவர் விஜயின் கோட் படத்திலும் இது போன்ற ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது இந்த யூகத்தை அதிகப்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது தான் நடித்துள்ள அமரன் படம் வெற்றி பெற்றுள்ள சந்தோஷத்தில் இருக்கும் சிவகார்த்திகேயனிடம் கூலி படத்தில் நடிக்கிறீர்களா என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், ‛‛நான் கூலி படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றது, அதன் படப்பிடிப்பு எனது வீட்டிற்கு நேர் எதிரில் உள்ள இடத்தில் நடந்ததால் தான். அதனால் நான் வீட்டிற்கு போகும்போது அப்படியே அங்கே செல்வது வழக்கம். கூலி என்னுடைய தலைவரின் படம். அது மட்டும் தான் எனக்கும் அந்த படத்திற்குமான கனெக்சன். மற்றபடி அந்த படத்தில் நான் இல்லை. தயவு செய்து என்னை வைத்து அந்த படத்தின் செய்திகளை வெளியே பரப்ப வேண்டாம்'' என்று கூறியுள்ளார்.
ஆனாலும் லோகேஷ் கனகராஜ் படத்தில் யார் வேண்டுமானாலும் சர்ப்ரைஸ் ஆக இடம் பெறுவார்கள் என ஏற்கனவே நிரூபணம் ஆகி உள்ளதால் சிவகார்த்திகேயனும் இந்த படத்தில் இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்று தான் ரசிகர்கள் இன்னும் நம்புகிறார்கள்.