இத்தாலி கார் ரேஸ்: 3வது இடம் பிடித்து மீண்டும் அஜித் அணி அசத்தல் | அட்லி படத்தில் நடிக்க அல்லு அர்ஜுனுக்கு 175 கோடி சம்பளமா? | விமானத்தில் செல்லும்போது மொபைலை தொலைத்த பூஜா ஹெக்டே! | விக்ரமின் 'வீர தீர சூரன்' படத்தின் சென்சார், ரன்னிங் டைம் வெளியானது! | 75 நாட்களில் திரைக்கு வரும் தக்லைப்! போஸ்டர் வெளியிட்ட படக்குழு!! | வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‛தி வெர்டிக்ட்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பயங்கரவாத சம்பவங்களை ஒப்பிட்டு கடலோர மக்களுக்காக ரஜினி வீடியோ வெளியீடு | ஜூன் மாதத்தில் துவங்கும் சூர்யா 46 படப்பிடிப்பு! | கார்த்திக்கு ஜோடியாகும் கல்யாணி பிரியதர்ஷன்! | 'எல் 2 எம்புரான்' படத்தின் பட்ஜெட் இவ்வளவுதானா ? |
நேஷனல் கிரஷ் என அழைக்கப்படும் அளவிற்கு தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் அளவில் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுள்ளார் ராஷ்மிகா மந்தனா. சினிமாவில் மட்டுமல்லாது நேரிலும் தனது க்யூட்டான செயல்பாடுகளால் ரசிகர்களின் மனதில் இன்னும் நெருக்கமாகிவிட்டார் ராஷ்மிகா. அதற்கேற்றார் போல் அவர் கைவசம் படங்களும் நிரம்பி வழிகின்றன. அந்த வகையில் தனுஷ் உடன் குபேரா படத்தில் நடித்து முடித்து விட்டவர், ஹிந்தியில் சவ்வா, சிக்கந்தர் மற்றும் தெலுங்கில் ரெயின்போ, தி கேர்ள் பிரண்ட் என பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அது மட்டுமல்ல புஷ்பா 2 படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு நடித்து வருகிறார் ராஷ்மிகா.
இதில் தற்போது புஷ்பா 2 மற்றும் சிக்கந்தர் படத்தின் படப்பிடிப்புகள் சமீப நாட்களாக அருகருகே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் புஷ்பா 2 படப்பிடிப்பில் பகலில் கலந்து கொள்ளும் ராஷ்மிகா அப்படியே இரவில் சிக்கந்தர் படப்பிடிப்பிற்கு சென்று விடுகிறார். இப்படி இரவு பகல் என ஓய்வில்லாமல் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்தாலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறிய விபத்து ஒன்று தனக்கு ஏற்பட்டதாக கூறிய ராஷ்மிகா பல நாட்கள் வீட்டில் ஓய்வெடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹிந்தியில் அனிமல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது சல்மான்கான், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் சிக்கந்தர் படம் ராஷ்மிகாவை பாலிவுட்டில் இன்னும் அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும் என நம்பலாம்.