இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛அமரன்'. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். இம்மாதம் 31ம் தேதி தீபாவளிக்கு இப்படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது.
அப்போது பேசிய சிவகார்த்திகேயன், ‛‛நான் சிறுவயதில் இருந்தே ரஜினிகாந்த்தின் மிகப்பெரிய ரசிகன். இது கமல் சாருக்கும் நல்லா தெரியும். ஆனபோதும் இவனிடத்தில் நடிப்பு திறமை உள்ளது. இவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம் என்று என்னை வைத்து இந்த படத்தை அவர் தயாரித்திருக்கிறார். அதேபோல் இந்த படம் திரைக்கு வந்த முதல் நாளில் ரஜினிகாந்த் படத்தை பார்த்துவிட்டு கட்டாயமாக பாராட்டு தெரிவிப்பார். அந்த அளவுக்கு இந்த படம் சிறப்பாக உருவாகி இருக்கிறது. அதோடு கோலிவுட் சினிமாவில் அபூர்வ சகோதரர்கள் என்றால் அது கமலும், ரஜினியும் தான்'' என்றும் நெகிழ்ச்சியுடன் பேசினார் சிவகார்த்திகேயன்.