'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
ரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்து திரைக்கு வந்த படம் நந்தன். தற்போது லண்டனில் இருக்கும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இந்த படத்தை ஓடிடி தளத்தில் பார்த்துவிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அந்த பதிவில், ‛ஓடிடி தளத்தில் நந்தன் படத்தை பார்த்தேன். பட்டியலின மக்களை முன்னேற்றுகிறோம் என்ற பெயரில் தங்கள் சுய லாபத்திற்காக பட்டியலின மக்களை சுரண்டி ஆட்சி செய்யும் சர்வாதிகார அரசியல்வாதிகளை தோலுரித்துக் காட்டியிருக்கிறது இந்த படம்.
தனது சிறப்பான நடிப்பின் மூலம் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்கள் படும் இன்னல்களை நம் கண் முன் கொண்டு வந்த நடிகர் சகோதரர் சசிகுமாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ஊராட்சிகளில் நடக்கும் அவல அரசியலை உள்ளபடியே காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குனர் ரா.சரவணன்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். பல ஆழமான கருத்துக்கள் நிறைந்த நந்தன் திரைப்படம் காலத்திற்கும் மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்று அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை.
அவரது பதிவுக்கு நடிகர் சசிகுமார் நன்றி தெரிவித்து டுவீட் போட்டு உள்ள நிலையில், இயக்குனர் ரா.சரவணனும் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அந்தப் பதிவில், உங்கள் குரலுக்கு எப்போதுமே சக்தி அதிகம் சார். நந்தன் படம் பார்த்து நீங்கள் பதிவிட்ட கருத்து பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள் மீதான அக்கறையை பெரிதாக்கி இருக்கிறது. ஒடுக்கு முறைகள் குறித்த விவாதங்களை தீவிரமாக்கி இருக்கிறது. நந்தன் படத்தை பெரிய அளவில் பேசு பொருளாக்கி இருக்கிறது. பயணம் அரசியல், படிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு மத்தியில் நந்தன் படம் பார்த்து கருத்து சொன்னதற்கும், சமூக நீதிக்காக குரலை பெரிதாக்கியதற்கும் மனமார்ந்த நன்றி சார் என்று அவர் பதிவிட்டுள்ளார்.