நாங்க இருக்கிறோம், ஆதரவு கொடுக்கிறோம் : அஜித்தை பார்க்க செல்லும் திரைபிரபலங்கள் | ரீ ரிலீஸில் மோதும் விஜய், அஜித் | சூர்யாவுக்கு வைத்திருந்த 'இரும்புக் கை மாயாவி', கை மாறிவிட்டதா ? | துரந்தர் 2 ஒத்தி வைக்கப்படவில்லை : வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் | பிரபாஸின் ஸ்பிரிட் பட ரிலீஸ் தேதி வெளியானது | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் சிறை | கவலையில் கிர்த்தி ஷெட்டி, பிரார்த்தனா, நிதி அகர்வால், மாளவிகா மோகனன் | மெளனம் பேசியதே ரீ ரிலீஸ் ஆகிறது | அடுத்தடுத்து தனுஷ் மீது தொடரும் அவதூறுகள் | ஹீரோயின் விஷயத்தில் பிரதீப் ரங்கநாதன் கில்லாடி |

தமிழ் சினிமாவில் சில வருடங்கள் முன்பு வரை முன்னணி நடிகையாக இருந்தவர் ஹன்சிகா. அதன்பின் அவருக்கான பட வாய்ப்புகள் கொஞ்சம் குறைந்தது. இந்நிலையில் 2022ம் ஆண்டு சோஹைல் கட்டுரியா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஹன்சிகாவின் நெருங்கிய தோழியின் முன்னாள் கணவர் அவர் என்று சொல்லப்பட்டது.
ஹன்சிகாவும், அவரது கணவரும் தற்போது புதிய வீடு ஒன்றிற்காக கிரஹப் பிரவேசம் நடத்தியுள்ளனர். அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அடுக்குமாடி குடியிருப்பு போலத்தான் அந்த வீடு தெரிகிறது. 'புதிய ஆரம்பம்' என தன் புதிய வீட்டின் கிரகப் பிரவேசம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் ஹன்சிகா. அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
சில மாதங்களுக்கு முன்புதான் பிஎம்டிபிள்யூ கார் ஒன்றை வாங்கியுள்ளதாக ஹன்சிகா தெரிவித்திருந்தார். மும்பை நடிகையருக்கு வீடும், காரும் மிகவும் பிடித்தமான விஷயங்கள். அடிக்கடி அது பற்றிய தகவல்கள் வந்து கொண்டேயிருக்கும்.




