ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் |

ஹிந்திப் படங்கள் சிலவற்றில் நடித்துள்ளவர் 2001ல் மிஸ் இந்தியா பட்டம் வென்ற செலினா ஜெட்லி. அவருக்கும், ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த ஹோட்டல் பிசினஸ்மேன் பீட்டர் ஹாக் என்பவருக்கும் 2011ல் திருமணம் நடைபெற்றது. 2012ல் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றார் செலினா. அடுத்து 2017லும் இரண்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. அதில் ஒரு குழந்தை இதயக் கோளாறால் இறந்து போனது.
கடந்த 14 வருடங்களாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்த கணவன், மனைவியிடையே தற்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தற்போது கணவர் மீது குடும்ப வன்முறைச் சட்டம் பிரிவின் கீழ் புகார் அளித்துள்ளார். உடல் ரீதியாக, செக்ஸ் ரீதியாக, வார்த்தை ரீதியாக கணவர் கொடுமைப்படுத்துவதாக அப்புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
50 கோடி ரூபாய் நஷ்ட ஈடாகவும், மாதம் 10 லட்ச ரூபாயை தனக்கும், தன் மூன்று குழந்தைகளுக்கும் தர வேண்டும் என்றும் என்று மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து நீதிமன்றம், செலினாவின் கணவர் ஹாக்கிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.