குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
சமூக அக்கறை பற்றி மேடைகளில் வாய் கிழியப் பேசும் சில சினிமா பிரபலங்கள் அவர்கள் துறையிலேயே அந்த அக்கறையைக் காட்டுவதில்லை. திரைப்படங்களில்தான் புகை, குடி என காட்சிகளை வைக்கிறார்கள் என்றால் போஸ்டர்களில் கூட அவற்றை வைத்து இளைய தலைமுறையைக் கெடுக்கும் வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு முன்பும் சில முன்னணி நடிகர்களின் படங்களின் முதல் பார்வை போஸ்டர்கள் வெளியான போது இப்படி புகை, குடி போஸ்டர்கள் இடம் பெற்றதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்கள். ஆனால், இப்படி போஸ்டர்களை வெளியிட்டு அதன் மூலம் எழும் சர்ச்சையை வைத்து இலவச விளம்பரம் தேடிக் கொள்வதையும் சிலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அந்த வரிசையில் தற்போது 'டிராகன்' பட போஸ்டர்கள் வெளியாகி உள்ளது. நேற்றைய விஜயதசமி நாளில் வெளியான இப்படத்தின் போஸ்டர்களில் படத்தின் நாயகன் பிரதீப் ரங்கநாதன் புகை பிடிப்பது போன்ற போஸ்டர்கள் வெளியாகி உள்ளன. ஒரு பண்டிகை நாளில் இப்படியான போஸ்டர்களை வெளியிடுகிறோமே என்ற ஒரு யோசனையும் இல்லாமல் வெளியிட்டுள்ளார்கள் படக்குழுவினர்.