ரூ.1.10 கோடி இழப்பீடு கேட்டு மாணவன் போட்ட வழக்கு : அமரன் பட செல்போன் எண் நீக்கம் | சூரி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை! | ஒரு உயிர் பலி : சிறப்புக் காட்சிகளை ரத்து செய்தது தெலங்கானா அரசு | புஷ்பா 2 - முதல்நாள் வசூல் முதல் கட்டத் தகவல் | டொவினோ தாமஸின் ‛ஐடென்டிடி' டீசர் வெளியானது | அரபு நாடுகளில் புஷ்பா 2 படத்தின் 19 நிமிட காட்சிகள் நீக்கம் | சுரேஷ் கோபி மகனுக்கு சண்டை சொல்லித்தரும் மம்முட்டி | புஷ்பா 2 - அமெரிக்காவில் முதல் நாளில் 4 மில்லியன் வசூல் | பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ : தெலுங்கில் சாதிப்பாரா ஜோதி கிருஷ்ணா | இறுதிக்கட்டத்தில் 'திருவள்ளுவர்' படம் : இளையராஜா இசை |
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர் பொன்ராம். அதன்பின் அவர் இயக்கிய படங்கள் தொடர்ச்சியாக வரவேற்பை பெறவில்லை. சமீபத்தில் பொன்ராம் இயக்கும் புதிய படத்தில் சண்முக பாண்டியன் நாயகனாக நடிக்கிறார் என அறிவிப்பு வந்து படப்பிடிப்பும் நடந்து வருகிறது.
இதில் மற்றொரு முக்கிய கதாப்பாத்திரத்தில் சரத்குமார் நடிக்கின்றார் என அறிவித்தனர். தார்னிகா, கல்கி ராஜா, காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்திற்கு 'கொம்பு சீவி' என தலைப்பு வைத்துள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவித்துள்ளனர். 1996ம் ஆண்டில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வைகை அணை பகுதியில் நடத்த கதைகள் என குறிப்பிட்டுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.