நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர்ராஜா இசையமைப்பில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, சினேகா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் செப்டம்பர் 5ம் தேதி வெளியான படம் 'தி கோட்'. இப்படம் 455 கோடியை இதுவரை வசூலித்துள்ளதாக சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தமிழகத்தில் மட்டும் 100 கோடிக்கும் அதிகமான ஷேர் தொகையைக் கொடுத்துள்ளது. இந்த வெற்றியை படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, விஜய், படத்தை வெளியிட்ட வினியோகஸ்தர் ராகுல் ஆகிய மூவர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இந்த வீடியோவை ராகுல் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
ஓடிடியில் வெளியான பிறகும் இப்படம் ஒரு மாதத்தைக் கடந்து தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.