கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
சோசியல் மீடியாவின் தாக்கம் எப்போது அதிகமாக ஆரம்பித்ததோ அப்போதிருந்தே பிரபலங்களின் பெயரால் பல்வேறு விதமான மோசடிகளும் நடக்க தொடங்கிவிட்டன. அதில் பல உண்மை போல தோன்றுவதால் ரசிகர்கள் பலரும் அதை நம்பி ஏமாறுவது உண்டு. இதனால் பிரபலங்கள் இதுபோன்று மோசடிகள் குறித்து தங்களது கவனத்திற்கு வரும்பொழுது உடனுக்குடன் அது குறித்து விளக்கம் அளித்து ரசிகர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பிரபல பின்னணி பாடகி சித்ராவின் பெயரில் சமூக வலைதளம் ஒன்றில் சில மர்ம நபர்கள் பண மோசடி விளம்பரம் ஒன்றை பதிவிட்டுள்ளனர்.
அதாவது அந்த பதிவில் சித்ரா கூறுவது போல, நான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தூதராக இருக்கிறேன் என்றும், இதில் பத்தாயிரம் ரூபாய் டெபாசிட் செய்து பங்குகளைப் பெற்றால் அதன் மதிப்பு ஒரு வாரத்தில் 50 ஆயிரம் வரை உயரும் என்றும் அதில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் ரசிகர்களுக்கு ஐ போன் பரிசாக தருவதாகவும் அதில் சொல்லப்பட்டிருந்தது. இந்த விளம்பரம் குறித்து தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலமாக கேள்விப்பட்ட சித்ரா உடனடியாக, இது தன்னுடைய பெயரை பயன்படுத்தி நடக்கும் மோசடி என்றும், இதில் யாரும் ஏமாற வேண்டாம் என்றும் இந்த போலி விளம்பரம் குறித்து ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் விழிப்புணர்வு எச்சரிக்கை விடுத்துள்ளார்.