அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படம் ரிலீஸூக்கு தயாராகி சில ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. கடந்த ஆண்டு கூட இந்த படத்தை திரைக்கு கொண்டு வர முயற்சி செய்தனர். ஆனால் வெளியாகவில்லை.
இந்த படம் தொடர்பாக சமீபத்தில் சிம்ரன் அளித்த பேட்டி ஒன்றில், "துருவ நட்சத்திரம் ஒரு முழுமையான ஆக்ஷன் மற்றும் ஸ்டைலான திரைப்படம். நாங்களும் அந்தப் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறோம். சரியான சமயத்தில் அந்தத் திரைப்படம் நிச்சயம் வெளியாகும். விக்ரம் ஒரு அற்புதமான நடிகர். அது ஒரு எவர்க்ரீன் திரைப்படம். மக்களுக்கு கண்டிப்பாக அந்தப் படம் எப்போ திரைக்கு வந்தாலும் பிடிக்கும்" என தெரிவித்தார்.