பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

சென்னை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்டில் நடைபெறுவதாக இருந்தது. அன்றைய தினத்தில் மழை பெய்ததால் ஒத்திவைக்கப்பட்டு செப்டம்பர் 10ம் தேதி அன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான பொறுப்பு சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும் உள்ளே கூட செல்ல முடியாமல் வெளியிலேயே நிறுத்தப்பட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோல்டு, பிளாட்டினம், சில்வர் என பல ஆயிரம் மதிப்பு கொண்ட டிக்கெட் வாங்கிய பலரும் இசை நிகழ்ச்சியை பார்க்காமல் வீடு திரும்பியதாக குற்றம்சாட்டினர்.
இதனையடுத்து, டிக்கெட் வாங்கியும் உள்ளே நுழைய முடியாதவர்கள், டிக்கெட் பிரதியை குறிப்பிட்ட மெயில் ஐடிக்கு குறைகளை குறிப்பிட்டு அனுப்புமாறு ஏ.ஆர்.ரஹ்மான் கோரியிருந்தார். இந்த நிலையில் அர்ஜூன் என்பவர் தான் ரூ.10 ஆயிரம் கொடுத்து டிக்கெட் எடுத்தும், அங்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் நிகழ்ச்சியை காண முடியவில்லை. இதனால் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அர்ஜூனுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.