மோசமான தோல்வியை சந்தித்த 'ஏக் தின்' | 'கருப்பு' ரிலீஸ் சிக்கலா? முன்பதிவு டல்லா? | லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படத்தில் பூஜா ஹெக்டே! | 'ஜனநாயகன்' பட ஓடிடி உரிமையை கைப்பற்ற போட்டி போடும் நிறுவனங்கள்! | நெல்சனால் தள்ளிப்போகும் 'ஜெயிலர் 2' படம்! | ஆகஸ்ட் மாதத்தை குறிவைத்த சூரியின் 'மண்டாடி' | அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுப்பைத் தொடரும் விஜய் அரசு | நீதி கிடைக்க வேண்டும்; இசையமைப்பாளர் மீது குற்றம்சாட்டிய ஸ்வாகதா பதிவு | 'கருப்பு' வியாபாரம், கசிந்த தகவல்… | சட்டசபையில் சனாதனம் பற்றிய உதயநிதியின் பேச்சு: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி |

சதுரங்க வேட்டை படத்தில் இயக்குனரான வினோத், அதன் பிறகு கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கியவர், பின்னர் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களை அடுத்தடுத்து இயக்கினார். தற்போது விஜய் நடிப்பில் ஜனநாயகன் படத்தை இயக்கி உள்ளார்.
இந்த படம் வருகிற பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் விஜய்யை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் படத்தை எச்.வினோத் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இதை அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது குபேரா, இட்லி கடை படங்களில் நடித்து முடித்து விட்ட தனுஷ், தேரே இஸ்க் மெயின் ஹிந்தி படம் மற்றும் மாரி செல்வராஜ் இயக்கும் படங்களில் தற்போது நடித்து வருபவர், அதைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி படம் உள்ளிட்ட இரண்டு புதிய படங்களில் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடித்து விட்டு அதன்பிறகு வினோத் இயக்கும் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.