பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

நடிகர் ரவி மோகனும், அவர் மனைவி ஆர்த்தியும் கருத்து வேறுபாடு காரணமாக சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்கள். இப்படியான நிலையில் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு பாடகி கெனிஷாவுடன் ஜோடியாக என்ட்ரி கொடுத்தார் ரவி மோகன். இதையடுத்து ஆர்த்தியும் அவரது ஆதரவு நடிகைகளும் ரவி மோகனையும் பாடகி கெனிஷாவையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பாடகி சுசித்ரா தனது இணையப் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ''நடிகர் ரவி மோகனும், கெனிஷாவும் அப்படி என்ன பெரிய தப்பு பண்ணிவிட்டார்கள். சினிமா உலகத்தில் யாரும் செய்யாத தவறா செய்துவிட்டார்கள். எல்லோரும் கமுக்கமா செய்கிறார்கள். ரவியோ அதை வெளிப்படையாக செய்கிறார். அதோடு அந்த பெண்ணுக்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கிறார். அதனால் அனைத்து பெண்களுமே கெனிஷாவை பார்த்து பெருமைப்பட வேண்டும். எதற்காக அவரை தாழ்த்தி பேசுகிறீர்கள். இவ்வளவு ஆண்டுகளாக வொர்க் அவுட் ஆகாத ஒரு திருமணத்திற்காக ஒருத்தி அழுது கொண்டிருக்கிறார்.
அவருக்கு கெனிஷாவை பற்றி கூறுவதற்கு என்ன தகுதி உள்ளது. அவர் என்ன பெரிதாக தவறு செய்து விட்டார். யாரும் போடாத மியூசிக் வீடியோவை அவர் போட்டு விட்டாரா? அவரது வீடியோ உங்கள் கண்ணை உறுத்துகிறதா? நடிகை ஆண்ட்ரியா மேடையில் போடும் டிரசைதான் அவரும் போடுகிறார். அப்படி இருக்கும்போது எதற்காக அவருடைய உடைகளை விமர்சனம் செய்கிறீர்கள். இது உங்களுக்கு அசிங்கமாக இல்லையா?'' என்று சரமாரியாக கேள்வி கேட்டுள்ள பாடகி சுசித்ரா, ''ரவி மோகன் தன்னுடைய பெயரிலிருந்த ஜெயம் என்பதை எடுக்காமல் இருந்திருக்கலாம். அந்த பெயர்தான் அவருக்கு தனித்துவமாக இருந்தது'' என்றும் அந்த வீடியோவில் பேசி இருக்கிறார் பாடகி சுசித்ரா.