‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

'லவ் டுடே, டிராகன்' படங்களுக்கு பிறகு 'லவ் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி' என்ற படத்தில் நடித்துள்ள பிரதீப் ரங்கநாதன், தற்போது கீர்த்தீஸ்வரன் இயக்கும் 'டியூட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மமீதா பைஜூ நடிக்கிறார். இந்த படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியானதை அடுத்து தற்போது ஒரு கன்னட பட நிறுவனம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அதாவது கன்னட நடிகர் ரவிச்சந்திரனின் மகன் மனோரஞ்சனை ஹீரோவாக வைத்து 'டியூட்' என்ற படத்தை தயாரிக்க 2016ம் ஆண்டே தலைப்பை தாங்கள் பதிவு செய்து விட்டதாக தெரிவித்து இருக்கிறார்கள். கன்னடம் மட்டுமின்றி தமிழிலும் இந்த படத்தை வெளியிட போகிறோம். இந்த நேரத்தில் பிரதீப் ரங்கநாதன் படத்துக்கு டியூட் என்ற பெயர் வைத்தது எங்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லப் போகிறோம். சுமூகமான முடிவு எட்டப்படவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளார்கள்.
இப்படி கன்னட பட நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்கு இதுவரை பிரதீப் ரங்கநாதன் படக்குழு தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் கொடுக்கப்படவில்லை. ஒருவேளை இந்த தலைப்பு சர்ச்சையை ஏற்படுத்தினால் இந்த டைட்டில் மாற்றப்படுமா? இல்லை கன்னட பட நிறுவனத்திடம் பேசி சுமுகமான தீர்வு காண்பார்களா? என்பது தெரியவில்லை.
அதோடு ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்திருக்கும் படத்திற்கு முதலில் லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்றுதான் பெயர் வைத்திருந்தார்கள். இதற்கு லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்ததால், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்று அந்த டைட்டிலை விக்னேஷ் சிவன் மாற்றி வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.