ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

நடிகர் ரவிமோகன், ஆர்த்தி தம்பதியினர் தங்களுக்குள் ஏற்பட்ட மனகசப்பால் பிரிந்து இருக்கிறார்கள். இன்னமும் அவர்களுக்கு சட்டப்படி விவகாரத்து கிடைக்கவில்லை. இவர்கள் பிரிவுக்கு பாடகி கெனிஷாதான் என்று கூறப்படுகிறது. ரவிமோகனுக்கு விவகாரத்து கிடைத்தவுடன் இருவரும் திருமணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், சமீபகாலமாக ரவிமோகன் செல்லும் இடங்களுக்கு கெனிஷா செல்கிறார். பட விழா, திருவண்ணாமலை கோயில், சினிமா நிகழ்ச்சி என அனைத்திலும் அவர் உடனே இருக்கிறார்.
கிட்டத்தட்ட மனைவி மாதிரி நடந்து கொள்கிறார். 'பராசக்தி' பட ரிலீஸ் என்று ரவிமோகன்தான் அந்த படத்தின் ஹீரோ என்ற ரீதியில் அவர் கொடுத்த பேட்டி சர்ச்சை ஆனது. அதை தொடர்ந்தும் ரவிமோகன் நிழல் மாதிரி கெனிஷா இருக்கிறார். அவரை மீறி ரவிமோகனை யாரும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதற்கு முன்பு ரவிமோகனிடம் இருந்தவர்களும் அவரிடம் இருந்து விலகிவிட்டனர். அப்பா, அம்மா, அண்ணன்களும் விலகி நிற்கிறார்கள். முழுக்க கெனிஷா கட்டுப்பாட்டில் ரவிமோகன் வந்துவிட்டார். இருவர்கள் இணைந்து 3 படங்களை தயாரிக்கிறார்கள். கெனிஷாவின் தலையீடு, ரவிமோகனுக்கு பிளஸா? மைனஸா என்பது போக, போக தெரியவரும் என்கிறார்கள் கோலிவுட்டில்.




