குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் அப்டேட் | ஸ்ருதி நாராயணனின் இன்ஸ்டா பதிவு | சிக்கந்தர் - மோசமில்லாத முதல் நாள் வசூல் | மாஸ்க், தொப்பி அணிந்தபடி டேட்டிங் செல்லும் விஜய்தேவர கொண்டா - ராஷ்மிகா | ரிலீஸிற்கு முன்பே பார்த்திருந்தால் மோகன்லால் அனுமதித்திருக்க மாட்டார் : மேஜர் ரவி கருத்து | தல வருகிறார், அவரை பாருங்கள் : அருண் விஜய் வெளியிட்ட பதிவு | ஏற்றி விட்ட ஏணியை மறந்து போன நடிகர்கள் : பாவமில்லையா பாரதிராஜா...! | மேலிடத்து உத்தரவு... கால்ஷீட் தராத தனுஷ் : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | கண்ணப்பா ரிலீஸ் தள்ளிப்போனது : காரணம் இது தான் | விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் |
தமிழில் மிஸ்கின் இயக்கிய பிசாசு படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை பிரயாகா மார்ட்டின். தொடர்ந்து மலையாள படங்களில் பிசியான கதாநாயகியாக நடித்து வருகிறார். பிரபல தாதாவான ஓம் பிரகாஷ் என்பவர் போதை பொருள் மற்றும் மது கடத்திய குற்றத்திற்காக சமீபத்தில் கேரளாவில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். அங்கே தங்கியிருந்த நாட்களில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அங்கு நடந்த பார்ட்டி ஒன்றில் நடிகை பிரயாகா மார்ட்டின் மற்றும் இளம் நடிகர் ஸ்ரீநாத் பாஷி ஆகியோர் கலந்து கொண்டதாக ஒரு தகவல் வெளியானது. இதனால் போலீசார் இவர்கள் இருவரையும் விசாரணை செய்ய இருக்கிறார்கள் என்றும் செய்தி வெளியானதால் மலையாள திரையுலகில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் உடனடியாக இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பிரயாகா மார்ட்டின், “அன்று நான் அந்த ஹோட்டலுக்கு சென்றது உண்மை. அங்கே பார்ட்டி நடந்தது உண்மை. ஆனால் அது என்னுடைய நண்பர்கள் என்னை அழைத்திருந்த பார்ட்டி. அங்கே அவர்களுடன் சேர்ந்து கொண்டாடிவிட்டு அதன்பிறகு சில மணி நேரங்களில் நான் வந்தே பாரத் ரயிலைப் பிடித்து வெளியூருக்கு செல்ல வேண்டியிருந்ததால் நண்பர்களின் அறையிலேயே இரண்டு மணி நேரம் தங்கியிருந்து விட்டு கிளம்பினேன்.
ஆனால் துரதிஷ்டவசமாக இப்படி ஒரு நபர் அந்த ஹோட்டலில் அப்போது இருந்தார் என்பது எனக்கு தெரியாது. இன்னும் சொல்லப்போனால் என்னிடம் இது பற்றிய பேட்டி வேண்டும் என மீடியாக்கள் கேட்டபோதுதான் சம்பந்தப்பட்ட அந்த தாதாவின் பெயரையே நான் முதன்முதலாக கேள்விப்பட்டேன். இந்த விஷயத்தில் இதுதான் உண்மையாக நடந்தது” என்று கூறியுள்ளார்.