ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் |
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் நாளை (அக்-10) வெளியாக இருக்கிறது. தனது இரண்டாவது படத்திலேயே ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பை பெற்றதுடன் 30 வருடங்களுக்குப் பிறகு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனையும், ரஜினியையும் இந்த படத்தில் மீண்டும் இணைந்து நடிக்க வைத்த பெருமையும் பெற்றுள்ளார் இயக்குநர் ஞானவேல்.
சில நாட்களாக தொடர்ந்து இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் இயக்குனர் ஞானவேல் சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் இருவருக்கான நடிப்பு ஒப்பீடு குறித்து நகைச்சுவையாக பேசினார்.
இது குறித்து அவர் பேசும்போது, “நடிகர் அமிதாப் பச்சனை பொறுத்தவரை அவர் ஒரு பர்ஸ்ட் பெஞ்ச் ஸ்டுடென்ட் போல. முதல் நாளே அவர் நடிக்க வேண்டிய காட்சிகளுக்கான பேப்பர்களை வாங்கிக் கொண்டு அதற்காக பக்காவாக தயாராகி வந்து மறுநாள் நாம் என்ன எதிர்பார்த்தோமோ அதை அப்படியே அழகாக கேமரா முன் செய்து விட்டு போவார். அதேசமயம் நடிகர் ரஜினிகாந்த் லாஸ்ட் பென்ச் ஸ்டுடென்ட் போல.. ரிகர்சல் எல்லாம் பார்க்க மாட்டார். ஷாட்டுக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தான் தனக்கான வசன பேப்பர்களை வாங்கி பார்ப்பார். பின் அவர் அதை மனதில் உள்வாங்கி தனது பாணியில் நடிப்பாக வெளிப்படுத்தும்போது அதில் ஒரு மேஜிக்கே நடக்கும்” என்று சிலாகித்துக் கூறியுள்ளார்.