மலையாள படத்தின் ஹிந்தி ரீமேக் : இயக்குனர் மறைந்து ஒரு வருடம் கழித்து வெளியாகும் படம் | உங்கள் அப்பாக்களுடனும் நடித்து உங்களுடனும் நடிப்பது ஆசீர்வாதம் தான் : நெகிழ்ந்த மோகன்லால் | அர்ச்சனா ரோல் மாடல் அர்ச்சனா | மாமன் படத்தில் கவுரவ வேடத்தில் விமல் | தமிழுக்கு வரும் துணை முதல்வர் படம் | டூரிஸ்ட் பேமிலி-யை பாராட்டிய ரஜினி : பொக்கிஷ பட்டயம் என சசிகுமார் நெகிழ்ச்சி | கார் ரேஸூக்காக 42 கிலோ எடை குறைத்தேன்: அஜித் பேட்டி | ரசிகர்கள் செய்த காரியத்தால் சூரி வேதனை | தமிழ் சினிமாவில் குறைந்து வரும் காமெடி…, ரைட்டர்கள் இல்லையா? | 3வது வாரத்திலும் முன்னேறும் 'டூரிஸ்ட் பேமிலி', பின்வாங்கும் 'ரெட்ரோ' |
தமிழில் மிஸ்கின் இயக்கிய 'பிசாசு' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை பிரயாகா மார்ட்டின். அதன் பிறகு தமிழில் பெரிய அளவு வாய்ப்பு இல்லாவிட்டாலும் கூட மலையாளத்தில் ஓரளவு பிசியான நடிகையாகவே நடித்து வந்தார் பிரயாகா மார்டின். ஆனால் சமீப காலமாக அவரது படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய பிரபல தாதா ஓம் பிரகாஷ் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று அவரை சந்தித்தார் என நடிகை பிரயாகா மார்ட்டின் மற்றும் மலையாளத்தில் அவ்வப்போது சர்ச்சைக்கு ஆளாகும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் ஸ்ரீநாத் பாஷி இருவரும் போலீசாரின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளனர் என்று சமீபத்தில் காவல்துறை வட்டாரத்தில் இருந்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல தாதா ஓம் பிரகாஷ் கொச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தபோது கடந்த அக்.,6ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது அறையில் எட்டு மது பாட்டில்களும் குறிப்பிடத்தக்க அளவில் கொக்கைன் என்கிற போதை பொருளும் கைப்பற்றப்பட்டது. மேலும் அவருடைய செல்போனில் இருந்த அழைப்புகளை சோதனை செய்த போதும் ஹோட்டலில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போதும் சம்பந்தப்பட்ட இந்த இரண்டு நட்சத்திரங்களும் அங்கே வந்து சென்றதாக சொல்லப்படுகிறது.
தாதா ஓம் பிரகாஷ் மதுபானங்கள் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தலில் மிகப்பெரிய தொடர்புடைய நபர் என்பதால் தான் போலீசார் அவரை வலை வீசி தேடி கைது செய்துள்ளனர். தற்போது இவருடன் தொடர்பில் இருந்தவர்கள், ஹோட்டலில் வந்து சந்தித்து சென்ற நபர்களை போலீசார் அடுத்தடுத்து விசாரிக்க இருப்பதால் விரைவில் பிரயாகா மார்ட்டின் மற்றும் ஸ்ரீநாத் பாஷி ஆகியோரும் இந்த விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.