ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

மூத்த நடிகை சரோஜாதேவி இன்று பெங்களூருவில் காலமானார். கன்னட சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானாலும், அவர் தமிழில்தான் அதிகப் படங்களில் நடித்துள்ளார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினிகணேசன் என 60களின் முன்னணி நடிகர்களுடனும் மற்ற நடிகர்களுடனும் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.
1967ல் திருமணம் செய்து கொண்ட பின்பும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார். 70 கால கட்டங்களில் அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. வருடத்திற்கு ஓரிரு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
90 கால கட்டத்தில் சிவாஜிகணேசனுடன் 'பாரம்பரியம், ஒன்ஸ்மோர்' ஆகிய படங்களில் நடித்தார். அதில் 'ஒன்ஸ்மோர்' படத்தில் விஜய் தான் கதாநாயகன். 1997ல் வெளிவந்த அந்தப் படத்திற்குப் பிறகு 2009ல் சூர்யா நடித்த 'ஆதவன்' படத்தில் படம் முழுவதும் இடம் பெறும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஒரு முழுமையான கதாபாத்திரத்தில் அவர் நடித்த கடைசி படமாக அந்தப் படம் அமைந்தது. அதற்குப் பின் 2019ல் வெளிவந்த கன்னடப் படமான 'நடசார்வபவுமா' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.
1955ல் நடிகையாக அறிமுகமானவர் 2019 வரையில் 64 வருடங்கள் திரையில் அவரது பயணம் இருந்தது குறிப்பிடத்தக்கது.