‛வெள்ளி விழா' படங்களில் முத்திரை பதித்த சரோஜா தேவி : வரிசை கட்டிய விருதுகள் | தனது உயிர் சென்னையில் பிரிய வேண்டும் என்று பேசியிருந்த சரோஜா தேவி | புதிய போட்டி வந்தாலும், சம்பளத்தை உயர்த்திய அனிருத் | தங்கள் தனிப்பட்ட சண்டையை மேடையில் பேசிய விஜய் சேதுபதி, பாண்டிராஜ் | ரவுடி சோடா பாபுவாக மாறிய அல்போன்ஸ் புத்திரன் | கமலை தொடர்ந்து நான்கு வேடங்களில் நடிக்கும் அல்லு அர்ஜுன் | எம்ஜிஆர் உடன் 26 ; சிவாஜி உடன் 22 படங்கள் : தமிழ் சினிமாவை கலக்கிய ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜா தேவி | துக்க வீட்டில் செல்பி எடுக்க முயன்ற ரசிகரை நெட்டி தள்ளிவிட்ட ராஜமவுலி | பயணம் எளிதல்ல! ; மங்காத்தா நடிகைக்கு அஜித் சொன்ன அட்வைஸ் | பழம்பெரும் நடிகையான ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜாதேவி காலமானார் |
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, 87 வயது மூப்பால் வரும் உடல்நலப் பிரச்சனையால் பெங்களூருவில் உள்ள காலமானார். மல்லேஸ்வரத்தில் தனது வீட்டிலேயே காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியிலும் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து புகழ்பெற்றவர். அவரின் பயோடேட்டா, வாங்கிய விருதுகள் மற்றும் தமிழ் அவர் நடித்த முக்கிய படங்களின் பட்டியலை இதில் காணலாம்.
பயோடேட்டா
இயற்பெயர் : ராதாதேவி
சினிமா பெயர் : பி சரோஜா தேவி
பிறப்பு : 07 - ஜனவரி - 1938
இறப்பு : 14 - ஜூலை - 2025
பெற்றோர் : பைரப்பா - ருத்ரம்மா
பிறந்த இடம் : பெங்களுரு - கர்நாடகா மாநிலம்
படித்த பள்ளி : "புனித தெரசா பள்ளி" - பெங்களுரு
சினிமா அனுபவம் : 1955 முதல் 2011 வரை
கணவர் : ஸ்ரீஹர்ஷா
பிள்ளைகள் : புவனேஷ்வரி - இந்திரா (மகள்கள்), கவுதம் ராமச்சந்திரன் (மகன்)
புனைப்பெயர் : "அபிநய சரஸ்வதி" - "கன்னடத்துப் பைங்கிளி"
மகுடம் சூட்டிய விருதுகள்
* 1969ல் இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை பெற்றார்.
* 1992ம் ஆண்டு "பத்மபூஷன் விருது" வழங்கி கவுரவிக்கப்பட்டார்
* 1965-ம் ஆண்டு கர்நாடக அரசு "அபிநய சரஸ்வதி" என்ற பட்டம் வழங்கி கவுரவித்தது.
* 1969ம் ஆண்டு சிறந்த நடிகைக்கான "தமிழ்நாடு அரசு சினிமா விருது" "குலவிளக்கு" திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
* 1980ம் ஆண்டு "அபிநந்தனா - காஞ்சன மாலா" விருது கர்நாடக அரசால் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.
* 1988ம் ஆண்டு "ராஜ்யோத்சவ விருது" கர்நாடக அரசால் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.
* 1993ம் ஆண்டு தமிழ் நாடு அரசு "எம் ஜி ஆர் விருது" வழங்கி கவுரவித்துள்ளது.
* 1994ம் ஆண்டு தென்னகத்திற்கான "ஃபிலிம் ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது" வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.
* 1997ம் ஆண்டு சினிமா எக்ஸ்பிரஸ் "வாழ்நாள் சாதனையாளர் விருது" வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
* 2001ம் ஆண்டு ஆந்திர அரசு "என் டி ஆர் விருது" வழங்கி கவுரவித்துள்ளது.
* 2006ம் ஆண்டு பெங்களுரு யுனிவர்சிட்டி "கௌரவ டாக்டர் பட்டம்" வழங்கி கவுரவித்தது.
* 2008ம் ஆண்டு இந்திய அரசு சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்
* 2009ம் ஆண்டு ஆந்திர அரசு "என் டி ஆர் விருது" இரண்டாம் முறையாக வழங்கி கவுரவித்தது.
* 2009ம் ஆண்டு "டாக்டர் ராஜ்குமார் விருது" கர்நாடக அரசால் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
* 2010ம் ஆண்டு "கலைமாமணி விருது" தமிழக அரசால் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
சரோஜா தேவி நடித்த முக்கியமான தமிழ்ப் படங்கள்
1. திருமணம் - டான்ஸர்
2. தங்கமலை ரகசியம் - துணை நடிகை
3. மனமுள்ள மறுதாரம் - கதாநாயகி
4. நாடோடி மன்னன் - கதாநாயகி
5. சபாஷ் மீனா - கதாநாயகி
6. செங்கோட்டை சிங்கம் - கதாநாயகி
7. தேடிவந்த செல்வம் - கதாநாயகி
8. இல்லறமே நல்லறம் - துணை நடிகை
9. பாகப்பிரிவினை - கதாநாயகி
10. கல்யாணப் பரிசு - கதாநாயகி
11. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை - கதாநாயகி
12. ஓடி விளையாடு பாப்பா - கதாநாயகி
13. பிரசிடென்ட் பஞ்சாட்சரம் - கதாநாயகி
14. வாழ வைத்த தெய்வம் - கதாநாயகி
15. எல்லோரும் இந்நாட்டு மன்னர் - கதாநாயகி
16. யானைப் பாகன் - கதாநாயகி
17. இரும்புத்திரை - துணை நடிகை
18. கைராசி - கதாநாயகி
19. பார்த்திபன் கனவு - துணை நடிகை
20. விடிவெள்ளி - கதாநாயகி
21. மணப்பந்தல் - கதாநாயகி
22. பாலும் பழமும் - கதாநாயகி
23. பனித்திரை - கதாநாயகி
24. தாய் சொல்லைத் தட்டாதே - கதாநாயகி
25. திருடாதே - கதாநாயகி
26. குடும்பத் தலைவன் - கதாநாயகி
27. ஆடிப்பெருக்கு - கதாநாயகி
28. வளர்பிறை - கதாநாயகி
29. பாசம் - கதாநாயகி
30. பார்த்தால் பசி தீரும் - கதாநாயகி
31. மாடப்புறா - கதாநாயகி
32. ஆலயமணி - கதாநாயகி
33. தாயைக் காத்த தனயன் - கதாநாயகி
34. இருவர் உள்ளம் - கதாநாயகி
35. பெரிய இடத்துப் பெண் - கதாநாயகி
36. குலமகள் ராதை - கதாநாயகி
37. பணத்தோட்டம் - கதாநாயகி
38. தர்மம் தலைகாக்கும் - கதாநாயகி
39. நீதிக்குப் பின் பாசம் - கதாநாயகி
40. கல்யாணியின் கணவன் - கதாநாயகி
41. வாழ்க்கை வாழ்வதற்கே - கதாநாயகி
42. பணக்காரக் குடும்பம் - கதாநாயகி
43. தாயின் மடியில் - கதாநாயகி
44. படகோட்டி - கதாநாயகி
45. தெய்வத்தாய் - கதாநாயகி
46. பாசமும் நேசமும் - கதாநாயகி
47. புதிய பறவை - கதாநாயகி
48. என் கடமை - கதாநாயகி
49. ஆசை முகம் - கதாநாயகி
50. எங்க வீட்டுப் பிள்ளை - கதாநாயகி
51. கலங்கரை விளக்கம் - கதாநாயகி
52. தாயும் மகளும் - துணை நடிகை
53. நான் ஆணையிட்டால் - கதாநாயகி
54. நாடோடி - கதாநாயகி
55. தாலி பாக்கியம் - கதாநாயகி
56. பறக்கும் பாவை - கதாநாயகி
57. அன்பே வா - கதாநாயகி
58. பெற்றால்தான் பிள்ளையா - கதாநாயகி
59. பெண் என்றால் பெண் - கதாநாயகி
60. அரச கட்டளை - கதாநாயகி
61. பணமா பாசமா - கதாநாயகி
62. என் தம்பி - கதாநாயகி
63. தாமரை நெஞ்சம் - கதாநாயகி
64. அன்பளிப்பு - கதாநாயகி
65. தங்கமலர் - கதாநாயகி
66. அஞ்சல் பெட்டி 520 - கதாநாயகி
67. ஐந்து லட்சம் - கதாநாயகி
68. குலவிளக்கு - கதாநாயகி
69. ஓடும் நதி - கதாநாயகி
70. மாலதி - கதாநாயகி
71. கண்மலர் - கதாநாயகி
72. சினேகிதி - கதாநாயகி
73. தேனும் பாலும் - கதாநாயகி
74. அருணோதயம் - கதாநாயகி
75. சக்தி லீலை - துணை நடிகை
76. பத்து மாத பந்தம் - துணை நடிகை
77. தாய் மேல் ஆணை - துணை நடிகை
78. பொன்மனச் செல்வன் - துணை நடிகை
79. பாரம்பரியம் - கதாநாயகி
80. ஒன்ஸ் மோர் - துணை நடிகை
81. ஆதவன் - துணை நடிகை
சரோஜா தேவியின் மனம் கவர்ந்த பாடல்கள்
1. காதல் சிறகை காற்றினில் விரித்து : பாலும் பழமும்
2. காவேரி ஓரம் : ஆடிப்பெருக்கு
3. தேரேது சிலையேது திருநாளேது : பாசம்
4. இதயவீணை தூங்கும்போது பாட முடியுமா : இருவர் உள்ளம்
5. உன்னை நம்பினால் கெடுவதில்லை ஆண்டவனே : பணக்கார குடும்பம்
6. என்னை எடுத்து தன்னைக் கொடுத்து : படகோட்டி
7. மலருக்கு தென்றல் பகையானால் : எங்க வீட்டுப் பிள்ளை
8. என்னை மறந்ததேன் தென்றலே : கலங்கரை விளக்கம்
9. யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் : பறக்கும் பாவை
10. அன்பே வா அன்பே வா : அன்பே வா
11. சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து... : புதிய பறவை
12. லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்... : அன்பே வா
13. ஆலயமணியின் ஓசையை... : பாலும் பழமும்
14. தங்கத்திலே ஒரு குறை... : பாகப்பிரிவினை
15. அன்று வந்ததும் அதே நிலா... : பெரிய இடத்து பெண்
16. தொட்டால் பூ மலரும்... : படகோட்டி
17. கல்யாண நாள் பார்க்க சொல்லவா... : பறக்கும் பாவை
18. குமரிப் பெண்ணின் உள்ளத்திலே... : எங்க வீட்டு பிள்ளை
19. ராஜாவின் பார்வை... : அன்பே வா
20. பேசுவது கிளியா... : பணத்தோட்டம்
21. உன்னை ஒன்று கேட்பேன்... : புதிய பறவை
22. நான் பார்த்ததிலே... : அன்பே வா
23. பறக்கும் பந்து பறக்கும்... பறக்கும் பாவை
24. நான் பேச நினைப்பதெல்லாம்... : பாலும் பழமும்
25. பொன்னெழில் பூத்தது... கலங்கரை விளக்கம்
26. ஒரு பெண்ணை பார்த்து... : தெய்வ தாய்
27. பாட்டு வரும்... : நான் ஆணையிட்டால்
28. யாரது யாரது... : என் கடமை
29. மானாட்டம் தங்க மயிலாட்டம்... : ஆலயமணி
30. கட்டோடு குழல் ஆட... : பெரிய இடத்து பெண்