'தாமரை நெஞ்சம்' ஒரு படம் போதுமே: பாலசந்தர் அளித்த பதில் | தமிழில் தனது கடைசி படத்தில் நடித்த சரோஜா தேவி | ‛வெள்ளி விழா' படங்களில் முத்திரை பதித்த சரோஜா தேவி : வரிசை கட்டிய விருதுகள் | தனது உயிர் சென்னையில் பிரிய வேண்டும் என்று பேசியிருந்த சரோஜா தேவி | புதிய போட்டி வந்தாலும், சம்பளத்தை உயர்த்திய அனிருத் | தங்கள் தனிப்பட்ட சண்டையை மேடையில் பேசிய விஜய் சேதுபதி, பாண்டிராஜ் | ரவுடி சோடா பாபுவாக மாறிய அல்போன்ஸ் புத்திரன் | கமலை தொடர்ந்து நான்கு வேடங்களில் நடிக்கும் அல்லு அர்ஜுன் | எம்ஜிஆர் உடன் 26 ; சிவாஜி உடன் 22 படங்கள் : தமிழ் சினிமாவை கலக்கிய ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜா தேவி | துக்க வீட்டில் செல்பி எடுக்க முயன்ற ரசிகரை நெட்டி தள்ளிவிட்ட ராஜமவுலி |
பாலசந்தர் இயக்கத்தில், எம்எஸ் விஸ்வநாதன் இசையமைப்பில், ஜெமினிகணேசன், சரோஜாதேவி, வாணிஸ்ரீ மற்றும் பலர் நடிப்பில் 1968ல் வெளிவந்த திரைப்படம் 'தாமரை நெஞ்சம்'. அப்படம் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆகிய மொழிகளில் பின்னர் ரீமேக் செய்யப்பட்டது. அதன்பின் பாலசந்தர் இயக்கத்தில் சரோஜாதேவி எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.
ஒரு முறை பாலசந்தர் மலேசியா சென்றிருந்த போது, அங்குள்ள ஒரு கடையில் பாலசந்தரை தற்செயலாக சந்தித்த சரோஜா தேவி, உங்கள் படங்களில் எல்லா நடிகர்களும் நான்கைந்து படங்களில் நடித்திருக்கிறார்கள். ஆனால், என்னை மட்டும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடிக்க வைத்தீர்கள். பின்னர் நடிக்க அழைக்கவேயில்லை என்று வருத்தப்பட்டிருக்கிறார்.
அதற்கு பாலசந்தர், நீங்கள் நடித்த 'தாமரை நெஞ்சம்' ஒரு படமே அந்த நான்கைந்து படங்களுக்கு சமமானது என்று பாராட்டியுள்ளார். அந்த உரையாடல் குறித்து பாலசந்தரிடம் உதவியாளராக இருந்த மோகன், தற்போது சரோஜாதேவியின் மறைவு அஞ்சலியில் பகிர்ந்துள்ளார்.