மூக்குத்தி அம்மன்-2 படத்தில் இரண்டு வேடங்களில் நயன்தாரா! | கிரவுட் பண்டிங்கில் உருவான 'மனிதர்கள்' | மீண்டும் கதை நாயகனாக காளி வெங்கட் | பிளாஷ்பேக்: வாகை சந்திரசேகரை அறிமுகப்படுத்திய பாரதிராஜா | பிளாஷ்பேக் : மனோரமாவை ஹீரோயினாக்கிவிட்டு மறைந்த டி.ஆர்.சுந்தரம் | தனுஷ், சிம்பு பட தயாரிப்பாளர் ஆகாஷ் வீட்டில் ரெய்டு: இவர் யார் தெரியுமா...? | தக் லைப் பட விழாவில் ரஜினி கலந்து கொள்வாரா? | சென்னை பக்கம் வர மறுக்கும் சமந்தா? | ரமணா 2 உருவாக வாய்ப்பு இருக்குதா? | என்னது, ரஜினி சம்பளம் 300 கோடியா? |
இந்திய சினிமாவின் தந்தை என்றழைக்கப்படும் தாதாசாகேப் பால்கே பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இரண்டு குழுவினர் படமாக எடுக்க முயற்சிப்பது நேற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு இயக்குனரான ராஜமவுலி இந்த பயோபிக் குறித்த அறிவிப்பை 2023ம் ஆண்டு வெளியிட்டுள்ளார். தேசிய விருது வென்ற நிதின் கக்கர் இயக்க 'மேட் இன் இந்தியா' என்ற அந்தப் படத்தை மராத்தி, தெலுங்கு, ஹிந்தி, தமிழ் கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிடப் போவதாக அப்போதே அறிவித்துள்ளனர். அதற்கான கதை, திரைக்கதை வேலைகள் கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வந்துள்ளது. அதில் பால்கே கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகரான ஜுனியர் என்டிஆர் நடிக்கலாம் என்று கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் தாதாசாகேப் பால்கே பற்றிய பயோபிக் படத்தை பிரபல ஹிந்தி இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்க அதில் பால்கே கதாபாத்திரத்தில் அமீர்கான் நடிக்க உள்ளதாக தற்போது செய்திகள் வந்துள்ளன. ஹிரானி, அமீர்கான் கூட்டணி '3 இடியட்ஸ், பிகே' படங்களுக்குப் பிறகு இந்த படத்தில் மீண்டும் இணைகிறார்கள். இதற்காக கடந்த நான்கு வருடங்களாக கதை, திரைக்கதை வேலைகள் நடந்து வந்துள்ளதாம்.
ஒரே சமயத்தில் இப்படி போட்டியான பயோபிக் படங்கள் உருவாக உள்ளது பற்றிய செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில் எந்தப் படம் முதலில் தயாராகும் என்பது விரைவில் தெரிய வரும்.