பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இடம் பெற்ற கோவிந்தா பாடல் காட்சிகளை நீக்கி படத்தை வெளியிட்டுள்ளது படக்குழு. அந்த பாடலுக்கு திருப்பதி தேவஸ்தானத்தை சேர்ந்த அறங்காவலர் பானு பிரகாஷ், திருப்பதியை சேர்ந்த ஜனசேனா கட்சி நிர்வாகிகள், தமிழகத்தில் சேலத்தை சேர்ந்த வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உலகம் முழுவதிலும் உள்ள திருப்பதி பெருமாள் பக்தர்களும் கொதித்தனர்.
இதற்கிடையே, வேறுவகையிலும் சந்தானம் மற்றும் படக்குழுவுக்கு எதிர்ப்பு வந்துள்ளது. படத்தை நடிகர் ஆர்யாவின் பட நிறுவனம் மற்றும் நிகாரிகா என்டர்டெயின்ட்மென்ட் இணைந்து தயாரித்துள்ளது. இதில் நிகாரிகா நிறுவனம் ஆந்திராவை சேர்ந்தது. நமது மாநிலத்தை சேர்ந்த நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஒரு தெலுங்குகாரர் தயாரிக்கும் படத்தில் திருப்பதி பெருமாள் நாமத்தை கொச்சை படுத்தலாமா? அந்த பாடல் படத்தில் இருந்தால் உங்கள் நிறுவனத்துக்கு கடும் பாதிப்பு ஏற்படும். நீங்கள் தயாரிக்கும் தெலுங்கு படங்களுக்கும் சிக்கல் ஏற்படும் என்று பல மூத்த தெலுங்கு தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்தார்களாம்.
தவிர, சந்தானம், ஆர்யாவிடம் ''இந்த படம் மட்டுமல்ல, அடுத்து நீங்க தயாரிக்கும் படங்களை கூட ஆந்திரா, தெலுங்கானாவில் ரிலீஸ் செய்ய முடியாது. கடுமையான பொருளாதார இழப்பு ஏற்படும்'' என்று சினிமா நண்பர்கள் சொல்ல, இவ்வளவு சிக்கல்களா என பயந்து அந்த பாடலை முழுமையாக நீக்கிவிட்டார்களாம். அந்த பாடல் நீக்கத்தால் நிறுவனத்துக்கு பல லட்சம் இழப்பு.