குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் அப்டேட் | ஸ்ருதி நாராயணனின் இன்ஸ்டா பதிவு | சிக்கந்தர் - மோசமில்லாத முதல் நாள் வசூல் | மாஸ்க், தொப்பி அணிந்தபடி டேட்டிங் செல்லும் விஜய்தேவர கொண்டா - ராஷ்மிகா | ரிலீஸிற்கு முன்பே பார்த்திருந்தால் மோகன்லால் அனுமதித்திருக்க மாட்டார் : மேஜர் ரவி கருத்து | தல வருகிறார், அவரை பாருங்கள் : அருண் விஜய் வெளியிட்ட பதிவு | ஏற்றி விட்ட ஏணியை மறந்து போன நடிகர்கள் : பாவமில்லையா பாரதிராஜா...! | மேலிடத்து உத்தரவு... கால்ஷீட் தராத தனுஷ் : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | கண்ணப்பா ரிலீஸ் தள்ளிப்போனது : காரணம் இது தான் | விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் |
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழில் 'லப்பர் பந்து' திரைப்படம் வெளியானது. அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவான இந்த படம் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு இன்னும் ஒரு வெற்றி படமாக அமைந்ததுடன் அதில் நடித்திருந்த அட்டகத்தி தினேஷ் மற்றும் மலையாள நடிகை சுவாசிகா ஆகியோருக்கு ஒரு கம்பேக் படமாகவும் அமைந்தது. குறிப்பாக கடந்த பத்து வருடங்களுக்கு முன்பே தமிழில் 'வைகை' என்கிற படத்தில் அறிமுகமான சுவாசிகா அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும் அவருக்கு பெரிய அளவில் பிரேக் கிடைக்காததால் மலையாள திரையுலகம் சென்று விட்டார். இப்போது மீண்டும் 'லப்பர் பந்து' படத்தின் மூலம் தமிழில் முதல் வெற்றியை ருசித்து இருக்கிறார்.
இவருக்கு கடந்த ஜனவரி மாதம் தான் பிரேம் ஜேக்கப் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இருவரும் சீரியல் ஒன்றில் இணைந்து பணியாற்றியபோது காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் சுவாசிகாவின் கணவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு சோசியல் மீடியா பதிவில், தனது மனைவி திருமணம் ஆன நாளிலிருந்து காலையில் எழுந்ததும் தனது காலை தொட்டு வணங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் என்றும் தானும் அதுபோல அவருடைய காலை தொட்டு வணங்குவேன் என்றும் கூறியுள்ளார்,
மேலும் சினிமா மற்றும் விளம்பர படப்பிடிப்புகள் ஆகியவற்றுக்கு கிளம்பும்போது தனது காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்று செல்வதையும் சுவாசிகா தவறாமல் செய்து வருகிறார் என்றும் அதேபோல நான் சாப்பிட்ட பிறகுதான் அதே தட்டில் அவரும் சாப்பிடுகிறார், ஒருவேளை தான் சாப்பிட்டதும் அதே தட்டில் கைகழுவி விட்டால் அவருக்கு கோபம் வந்து விடுகிறது என்றும் கூறியுள்ள பிரேம் ஜேக்கப், இது பற்றி பலர் கிண்டலாக பேசினாலும் கூட சுவாசிகாவை பொருத்தவரை நமது பழைய பாரம்பரிய கலாசாரங்களை அப்படியே பின்பற்ற வேண்டும் என்று நினைப்பவர் என்று கூறியுள்ளார்.
கணவரின் இந்த பதிவு குறித்து சுவாசிகா கூறும்போது, “நான் தினசரி அவரது காலை தொட்டு வணங்குவேன் என திருமணமான போது கூறியதும், அதேபோல நானும் உனது காலை தொட்டு வணங்குவேன் என அவரும் கூறினார். சும்மா பேச்சுக்கு தான் சொல்கிறார் என நினைத்தேன். ஆனால் நான் தடுத்தும் கூட இப்போது வரை அதை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார் எனது கணவர்” என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.