'கோட்' மோதிரத்துடன் வைரலாகும் விஜய் புகைப்படம்! | ஒரு வாரத்தில் 400 கோடி கடந்த 'தேவரா' வசூல் | விஜய் 69வது படத்தின் டெக்னீசியன்கள் பட்டியல் வெளியானது! | மனதை கல்லாக்கி அந்தக் காட்சிகளை நீக்கினேன் - பிரேம்குமார் | கட்சி பூஜையில் பங்கேற்காமல் கடைசி பட பூஜையில் பங்கேற்ற விஜய் | புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணையும் அதர்வா! | 2024க்கான உலகின் மிகச்சிறந்த 25 ஹாரர் படங்களில் 2ம் இடம் பிடித்த பிரம்மயுகம் | போக்சோவில் கைதான ஜானிக்கு தேசிய விருது வழங்கப்படுமா? | ஒரே நாளில் விஜய்யின் இரண்டு 'பூஜைகள்' | வேட்டையன் படத்தின் இடைவேளையில் விடாமுயற்சி டீசரா? |
இயக்குனரும், நடிகருமான அர்ஜுனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி, பின் 'செல்லமே' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விஷால். அந்தப் படம் 20 வருடங்களுக்கு முன்பு 2004ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி வெளியானது. அவரது அறிமுகப் படமே குறிப்பிடும்படியான வெற்றிப் படமாக அமைந்தது.
அடுத்து அவரது நடிப்பில் வெளிவந்த 'சண்டக்கோழி' படமும் ஒரு தரமான ஆக்ஷன் படமாக அமைந்தது. தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் மட்டுமே அதிகமாக நடித்து வந்தார். பாலா இயக்கத்தில் வெளிவந்த 'அவன் இவன்' படம் விஷாலின் மற்றொரு பரிமாணத்தைக் காட்டியது.
கடந்த 20 வருடங்களில் அவரது நடிப்பில் வெளிவந்த 30க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில், “பாண்டிய நாடு, துப்பறிவாளன், இரும்புத் திரை, மார்க் ஆண்டனி” ஆகிய படங்கள் குறிப்பிடும்படியான சில முக்கிய படங்கள். இன்னும் சில படங்கள் நிறைவான ஆக்ஷன் படங்களாக இருந்தாலும் அந்தப் படங்களுக்கான வரவேற்பு அப்போது கிடைக்காமல் போனது ஆச்சரியம்தான். அப்படங்கள் தற்போது டிவியில் ஒளிபரப்பாகும் போது ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படுகிறது.
இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்திருக்கிறார். இரண்டாவது முறையாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
அடுத்து சில முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் விஷால் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம்.