சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' |
விஜய் நடிக்கும் படங்கள் கடந்த சில வருடங்களில் சாதனை வசூலைக் குவிப்பது வழக்கமாக இருக்கிறது. கடந்த வாரம் வெளியான 'தி கோட்' படத்தின் வசூல் தற்போது ரூ.300 கோடியைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம் படத்தின் வசூல் 288 கோடி என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் கடந்த இரண்டு நாட்களாக நல்ல வசூல் இருந்ததால் தற்போது 300 கோடியைக் கடந்திருக்கும் என்கிறார்கள். விஜய் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த படங்களில், “லியோ, வாரிசு, பிகில்” ஆகிய படங்கள் 300 கோடி வசூலைக் கடந்துள்ளன.
அடுத்த வாரத்தில் ஓணம், மீலாடி நபி என விடுமுறை நாட்கள் வருவதால் அது வரையிலும் படத்திற்கான வரவேற்பு குறையாது என தியேட்டர் வட்டாரங்களில் எதிர்பார்க்கிறார்கள். தற்போதைய நிலவரப்படி படம் அடுத்த ஒரு வாரத்திற்குள்ளாக 400 கோடி வசூலைக் கடக்கலாம் என்று சொல்லப்படுகிறது.