நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தீவிர அரசியலில் இறங்க உள்ளதால் தனது கடைசி படமாக 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றது.
எச்.வினோத் இயக்கி வரும் அப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரப் பெயர் 'தளபதி வெற்றிகொண்டான்' என சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அது உண்மைதானா என்பது போகப் போகத்தான் தெரியும்.
'வெற்றிகொண்டான்' என்ற பெயரில் திமுகவில் ஒரு ஆபாசப் பேச்சாளர் இருந்தார். இரட்டை அர்த்தங்களில் அவர் பேசும் மேடைப் பேச்சைக் கேட்க அந்தக் காலத்தில் பெரும் கூட்டம் கூடும். 2011ம் ஆண்டு உடல்நலக் குறைவால் அவர் காலமானார். அப்படியான பேச்சாளர் ஒருவரின் பெயரை விஜய் தனது படத்தில் வைத்துக் கொண்டிருக்க வாய்ப்பில்லை.
அல்லது அவரைப் பற்றி விஜய்க்கோ, படத்தை இயக்கும் எச்.வினோத்துக்கோ தெரியாமல் இருந்திருக்கலாம். விஜய் அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும், விஜய் கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் என்பதாலும், 'வெற்றி' என்பது இடம் பெற 'வெற்றிகொண்டான்' என வைத்திருக்கவும் வாய்ப்புள்ளது.