கேம் சேஞ்சர் படத்தின் ரிசல்ட் ஏமாற்றம் அளிக்கிறது : இயக்குனர் ஷங்கர் | அனுஷ்காவின் காதி படத்தில் முக்கிய வேடத்தில் விக்ரம் பிரபு | பெரிய படங்ளை வாங்கிய ஓடிடி நிறுவனம் | நட்புக்காக கெஸ்ட் ரோலில் நடித்ததுடன் சக்சஸ் மீட்டிலும் கலந்து கொண்ட மம்மூட்டி | மூன்று முடிச்சு சீரியலில் என்ட்ரி தரும் மிதுன் | மறுபிறவி தந்த கிருஷ்ணதாசி - நளினி பேட்டி | பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியா | பொங்கல் போட்டியில் முந்தும் 'மத கஜ ராஜா' | ஒரே நாளில் வசூல் அப்டேட்டை நிறுத்திய 'கேம் சேஞ்ஜர்' | நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் 'வாடிவாசல்' |
கேரளாவில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை பலத்த புயலை கிளப்பி உள்ளது. தோண்ட தோண்ட வரும் பூதம்போல பாலியல் புகார்கள் குவிந்து கொண்டு வருகிறது. இதை தொடர்ந்து தென்னிந்திய மாநிலங்களில் ஹேமா கமிட்டி போன்ற கமிட்டி அமைத்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் கன்னட திரையுலககை சேர்ந்த 153 நடிகர், நடிகைகள் கையெழுத்திட்டு கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
அந்த கடிதத்தில் அவர் கூறப்பட்டிருப்பதாவது : நீதிபதி ஹேமா குழு அறிக்கையில், மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல் கன்னட திரைத்துறையில் நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்கள் குறித்து உடனடியாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.
கன்னட திரைத்துறையில் நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் குறித்தும், பெண்களுக்கு பாதுகாப்பான, சமமான பணி சூழலை உருவாக்க தேவையான கொள்கைகளை வகுக்க வேண்டும் என்பது குறித்த விஷயங்களிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும். 3 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும். அந்த அறிக்கையில் கூறப்படும் அம்சங்கள் பகிரங்கப்படுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.