ஆர்யாவிற்கு ஜோடியாகும் அனுபமா பரமேஸ்வரன்! | 'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் |

உதிரிபூக்கள், முள்ளும் மலரும் போன்ற உயர்ந்த படைப்புகளை தந்த மகேந்திரன் அடிப்படையில் எழுத்தாளர். நாம் மூவர், சபாஷ் தம்பி, பணக்கார பிள்ளை, கங்கா, திருடி, தங்கபதக்கம் உள்ளிட்ட பல படங்களின் கதை இவருடையது. அந்த வரிசையில் மகேந்திரன் எழுதிய நாடகம்தான் 'ரிஷி மூலம்'. சென்னை மேடையில் நடத்தப்பட்டு வந்த இந்த நாடகத்தை எஸ்.பி.முத்துராமன் அதே பெயரில் படமாக இயக்கினார்.
பல வருடங்கள் பிரிந்து வாழும் கணவன், மனைவியை அவர்களது பிள்ளைகள் சேர்த்து வைப்பது மாதிரியான கதை. இதில் கணவனாக சிவாஜியும், மனைவியாக கே.ஆர்.விஜயாவும் நடித்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார். 1980ம் ஆண்டு வெளிவந்தது. இந்த படம் 100 நாளை கடந்து ஓடியது. 100வது நாளில் படத்தின் தயாரிப்பாளர் சிவாஜிக்கு வைர மோதிரம் பரிசளித்தார்.
15 வருடங்களுக்கு பிறகு கணவனும், மனைவியும் சந்தித்து கொள்ளும் வசனமே இல்லாத 5 நிமிட காட்சி இன்றளவுக்கும் பேசப்படுகிறது. வெறும் முக பாவத்திலேயே அன்பு, காதல், பிரிவு, சோகம், மகிழ்வு எல்லாவற்றையும் வெளிப்படுத்தியிருப்பார்கள் சிவாஜியும், கே.ஆர்.விஜயாவும்.