23 வருடங்களுக்கு பிறகு பிரசாந்த் - ஹரி கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விஜய்யின் ‛லியோ' பட சாதனையை முறியடித்த அஜித்தின் ‛குட் பேட் அக்லி' டிரைலர்! | பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‛கொம்பு சீவி' | சத்யராஜ் பாணியில் கதை தேடும் ‛மர்மர்' நாயகன் தேவ்ராஜ்! | தமிழகத்திற்காக மற்ற மாநிலங்களிலும் ‛குட் பேட் அக்லி' படத்தின் அதிகாலை காட்சி ரத்து! | ரோமியோக்களால் மொபைல் நம்பரை மாற்றிய நடிகை | விரும்பிய கல்லூரியில் சேர குத்துச்சண்டை பழகிய பிரேமலு ஹீரோ | புஷ்பா 2 சம்பவம் எதிரொலி ; ஆர்யா-2 ரீ ரிலீஸான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு | சன்னி தியோலை நேரில் சந்தித்த பிரபாஸ்: ‛ஜாட்' படத்திற்கு வாழ்த்து | பிரித்விராஜ்க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் ; எம்புரான் படம் காரணம் அல்ல |
கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு மலையாள சினிமாவில் புயல்வீச தொடங்கி உள்ளது. பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளனர். இதே போன்று மற்ற மொழி திரையுலகிலும் பாலியல் தொல்லை இருக்கிறது. அதற்கும் விசாரணை கமிட்டி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் தமிழ் சினிமாவிலும் பாலியல் தொல்லை இருக்கிறது என்று பிரபல நடிகை ஊர்வசி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே பாலியல் தொல்லை இருந்துள்ளது. எனக்கு முந்தைய மூத்த நடிகைகள் இதுகுறித்து என்னிடம் கூறியிருக்கிறார்கள். எனவே இந்த பிரச்சினை சினிமா உலகத்தில் புதிதாக இப்போது தோன்றியது அல்ல. ஆனால் தற்போது திரைத்துறையில் உள்ள பெண்களின் பிரச்னையைப் பற்றி வெளிப்படையாக பேசுவதற்கு அரசு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
கேரள சினிமாவில்தான் இப்படி அதிகமாக நடக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள். அது தவறு. தமிழ் சினிமாவிலும் இதே மாதிரியான பாலியல் சீண்டல்கள் நடக்கின்றன. ஆனால் அதை வெளிப்படையாக பேச யாரும் முன்வரவில்லை. அதனால் அங்கே எதுவுமே நடக்கவில்லை என சொல்ல முடியாது.
ஆனால் கேரளாவில் தான் பெண்கள் அதை துணிச்சலாக எதிர்கொள்ள முன்வந்தனர். எதிர்த்து குரல் கொடுத்தனர். இங்கே முற்போக்கான பெண்கள் அதிகம் உள்ளதால் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இனிமேல் யாரும் பாதிப்பு அடையக்கூடாது என்பதற்காக வெளிப்படையாக போராடுகின்றனர்.
சினிமாவில் வேலை செய்யும் பெண்கள் நூற்றுக்கணக்கான நபர்களுடன் தான் சேர்ந்து வேலை செய்கிறோம். ஆனால் தனிப்பட்ட சந்திப்பின் போதுதான் இப்படியான சீண்டல்கள் நடக்கின்றன. அப்படியென்றால் பெண்கள் சந்திப்பை பொது இடத்தில் நடத்த வேண்டும். தனிப்பட்ட முறையில் சந்திக்க கூடாது.
யார் நல்லவர்? யார் கெட்டவர்? என தேடிப்பார்த்து சட்டம் வகுக்க முடியாது. ஒரு பெண் பாலியல் புகார் கொடுத்து விட்டார் என்பதால் அப்படியே ஏற்றுக் கொள்ளக்கூடாது. அது விசாரிக்கப்பட வேண்டும். சிலர் ஒருவரின் நன்மதிப்பைக் கெடுக்கவும் கூட பொய்யான புகாரை அளிக்கலாம். எனவே எந்த விஷயமாக இருந்தாலும் விசாரணை தேவை. அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் விசாரணை முக்கியம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.