த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' | குழந்தைகளின் உளவியலை பேசும் 'நாங்கள்' | சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி | பிளாஷ்பேக்: கடைசி வரை ஹீரோயின் ஆக முடியாத பிருந்தா பரேக் |
இப்போதெல்லாம் குறைந்த நாளில் ஒரு படத்தை எடுத்து முடிப்பது சாதனையாக பார்க்கப்படுகிறது. படத்தை ஒரு மாதத்தில் முடித்தோம், 20 நாளில் முடித்தோம் என்று பெருமையாக பேசிக் கொள்வார்கள். ஆனால் 1932ம் ஆண்டு வெளிவந்த அதாவது 92 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'ஹரிச்சந்திரா' 21 நாளில் எடுக்கப்பட்ட படம்.
மேடை நாடகமாக நடத்தப்பட்டு வந்த ஹரிச்சந்திராவை சாகர் மூவி டோன் நிறுவனம் திரைப்படமாக தயாரிக்க முடிவு செய்தது. அப்போது நடிப்பதற்கு ஆள் இருந்தாலும், கேமராவை கையாள்வதற்கும், படத்தை இயக்குவதற்கும் வெளிநாட்டினர் தேவைப்பட்டார்கள். அப்படி ஜெர்மன் நாட்டில் இருந்து அழைத்து வரப்பட்ட ஒருவர்தான் முதலில் ஹரிச்சந்திராவை இயக்கினார். பின்னர் அவர் பாதியிலேயே கிளம்பிவிட மீதி படத்தை ஹந்தி இயக்குனர் சர்வோட்டம் படாமி என்பவர் எடுத்து முடித்தார். அவருடன் ராஜா சந்திரசேகர், டி.சி.வடிவேலு நாயக்கர் ஆகியோர் இணை இயக்குனர்களாக பணியாற்றினார்கள். வி.எஸ்.சுந்தரேச அய்யர், நுங்கம்பாக்கம் ஜானகி, குமாரி ருக்மணி நடித்தார்கள்.
சுமார் 18 ரீல்களை கொண்ட இந்த படம் முன்றரை மணி நேரம் ஓடக்கூடியது. 30 பாடல்களை கொண்டது. இதை எப்படி 21 நாளில் எடுத்தார்கள் என்றால்... அதாவது 6 மாதம் வரை ஒத்திகை நடத்தி, நாடகத்தை அப்படியே நடத்தி அதை அப்படியே படம் பிடித்தார்கள். சில காட்சிகள் மட்டும் குளோஸ் அப், பாடல் காட்சிகளில் கூடுதல் அசைவுகள் என படத்தை எடுத்தார்கள். படமும் பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் தமிழில் வெளிவந்த 3வது பேசும் படம். 4 பிரதிகள் எடுக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் திரையிடப்பட்டது.