குட் பேட் அக்லி : ஓஜி சம்பவம் பாடல் வெளியானது | ஜனநாயகன் படம் குறித்து மமிதா பைஜூ கொடுத்த அப்டேட் | இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித்தை ஹீரோவாக்கும் பிரபுதேவா | ஏஸ் படத்தின் உருகுது உருகுது... முதல் பாடல் வெளியானது | சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் |
தெலுங்கில் ரவிதேஜா கதாநாயகனாக நடித்துள்ள மிஸ்டர் பச்சன் என்கிற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம் கடந்த 2018ல் ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன ரெய்டு படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது. படம் துவங்கும்போதே இது அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டு விட்டது. அதே சமயம் படத்தின் இயக்குனரான ஹரிஷ் சங்கர் இதன் ரீமேக் உரிமையை நாங்கள் வாங்கி இருந்தாலும் கிட்டத்தட்ட தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றது போல புத்தம் புதிதாக காட்சிகளை உருவாக்கியுள்ளோம். ரீமேக் படம் பார்த்தது போலவே இருக்காது என்று கூறி வருகிறார்.
இருந்தாலும் இவர் ஏற்கனவே இரண்டு ரீமேக் படங்களை இயக்கியதால் இந்தப் படத்தையும் அதேபோல காட்சிக்கு காட்சி எடுத்து வைத்திருப்பார் என்று சோசியல் மீடியாவில் பலரும் கமெண்ட் பதிவிட்டு வருகிறார்கள். இதனால் ரொம்பவே வருத்தத்திற்கு ஆளான ஹரிஷ் சங்கர், “வேண்டுமென்றால் இந்த படம் பார்க்க வருவதற்கு முன்பாக ஹிந்தியில் வெளியான ரெய்டு படத்தையும் ஒரு தடவை பார்த்துவிட்டு வாருங்கள் அப்போதுதான் அதிலிருந்து இந்த படத்தை நாங்கள் எவ்வளவு வித்தியாசப்படுத்தி புதிதாக எடுத்திருக்கிறோம்” என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும் என்று அழாத குறையாக வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.
கமல் நடித்த விக்ரம் படம் வெளியான போது கூட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படம் பார்க்க வரும் ரசிகர்களை தனது கைதி படத்தை ஒரு முறை பார்த்துவிட்டு விக்ரம் படம் பார்க்க வாருங்கள் என்று கோரிக்கை வைத்ததை போலவே தற்போது இயக்குனர் ஹரிஷ் சங்கரும் ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.