'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி |
நடிகர் பஹத் பாசில் தற்போது மலையாள திரையுலகையும் தாண்டி தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகராக மாறிவிட்டார். குறிப்பாக தமிழில் விக்ரம், மாமன்னன் ஆகிய படங்களைத் தொடர்ந்து அவர் நடிக்கும் படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. அந்த வகையில் அடுத்ததாக ரஜினிகாந்துடன் அவர் இணைந்து நடித்துள்ள வேட்டையன் மற்றும் தெலுங்கில் அவர் நடித்துள்ள புஷ்பா 2 ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. இந்த நிலையில் தனது சில தினங்களுக்கு முன்பு பஹத் பாசில் தனது 42வது பிறந்த நாளை கொண்டாடினார், திரை உலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் சற்று தாமதமாக நான்கு நாட்கள் கழித்து அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் நடிகர் மோகன்லால். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பஹத் பாசில் தனது கன்னத்தில் வாஞ்சையுடன் முத்தமிடும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ள மோகன்லால், ஆவேசம் படத்தில் பஹத் பாசில் பேசும் வசனமான எடா மோனே என்கிற வசனத்தையும் குறிப்பிட்டு ஐ லவ் யூ என்று கூறி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.