Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'இந்தியன் 3' வெளியீடு தள்ளிப் போக வாய்ப்பு ?

10 ஆக, 2024 - 10:56 IST
எழுத்தின் அளவு:
Indian-3-release-likely-to-be-delayed

ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம் 'இந்தியன் 2'. அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இந்தப் படத்திற்கு கடுமையான நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து படத்தின் வெற்றியையும், வசூலையும் பாதித்தது. நேற்று ஓடிடியில் வெளியான இந்தப் படத்திற்கு மீண்டும் அதிக நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஓடிடி தளத்திலிருந்து சில பல வீடியோக்களை 'கட்' செய்து அவற்றை வைத்து 'டிரோல்' செய்தும் வருகிறார்கள்.

இதனிடையே, 'இந்தியன் 3' படம் பற்றி ஒரு தகவல் தற்போது கோலிவுட்டில் கசிந்துள்ளது. முதலில் இந்த மூன்றாம் பாகப் படத்தை 2025 பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால், இரண்டாம் பாகத்திற்கு வந்த விமர்சனங்களை அடுத்து மீண்டும் சில காட்சிகளை 'ரீ ஷூட்' செய்யலாம் என பேசி முடிவெடுத்திருக்கிறார்களாம் என்று ஏற்கெனவே தகவல் வெளியானது.

ஷங்கர் தற்போது ராம் சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தின் வேலைகளில் இருக்கிறார். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்திற்கு அப்படம் வெளியாக உள்ளது. அந்தப் படத்தின் ரிலீசுக்குப் பிறகும் சில நாட்கள் இருந்து, அதற்குப் பிறகுதான் அவர் 'இந்தியன் 3' பக்கம் வருவாராம். அதற்குள் கமல்ஹாசனும் மணிரத்னம் இயக்கி வரும் 'தக் லைப்' படத்தை முடித்துக் கொடுத்துவிடுவாராம்.

தேவைப்பட்டால் 'இந்தியன் 3'யில் சில பல மாற்றங்களைச் செய்யவும் தயாரிப்பு நிறுவனம் அனுமதி அளித்துள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அதனால், அடுத்த வருட கோடை விடுமுறையில்தான் மூன்றாம் பாகம் வரும் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
இதுவும் ஆணாதிக்கமே : பிரியா பவானி சங்கர் வருத்தம்இதுவும் ஆணாதிக்கமே : பிரியா பவானி ... 'குறுந்தொகை' மேற்கோளுடன் நாகசைதன்யா, சோபிதா காதல் பதிவு 'குறுந்தொகை' மேற்கோளுடன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Sridhar - Jakarta,இந்தோனேசியா
10 ஆக, 2024 - 02:08 Report Abuse
Sridhar அந்த படம் வந்தாலும் கழுவிகழுவி ஊத்தப்போறாங்க. எதுக்கு அனாவசியமா ரிலீஸ் பண்ணிக்கிட்டு? முதல்ல இனிமே யாரு அத வாங்க முன்வருவாங்க? பார்த்தசாரதி படம் இனிமே ஏது வந்தாலும் கேலிகிண்டலுக்குத்தான் ஆளாகும்.
Rate this:
vijai -  ( Posted via: Dinamalar Android App )
10 ஆக, 2024 - 12:08 Report Abuse
vijai 3?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in