நான் ஏன் பிறந்தேன், தம்பிக்கு எந்த ஊரு, துணிவு - ஞாயிறு திரைப்படங்கள் | 'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் |
நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யா, 'பொன்னியின் செல்வன்' நடிகை சோபிதா துலிபலா இருவரும் கடந்த சில வருடங்களாகவே காதலித்து வருவதாக செய்திகள் வந்தன. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவர்களுக்கு திருமண நிச்சயம் நடந்தது. நாகார்ஜூனா அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
அதற்குப் பின் நேற்று நாக சைதன்யா, சோபிதா இருவரும் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான 'குறுந்தொகை' பாடல் ஒன்றின் எளிமையான ஆங்கில மொழியாக்கத்தைப் பதிவிட்டு தங்களது காதலை வெளிப்படுத்தி சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளனர்.
“எனது அம்மா உனக்கு என்னவாக இருக்க முடியும்?, எனது தந்தை உனக்கு என்ன உறவினர்?, நீயும் நானும் எப்படி சந்தித்தோம்? ஆனால், காதலில் எங்கள் இதயங்கள் செம்மண் பூமி மற்றும் மழைநீர் போல் இணைந்துவிட்டன” என்று பதிவிட்டுள்ளனர்.
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
என்பது அந்த பாடல்... இதன் அர்த்தம்...
என் தாயும் உன் தாயும் யார் யாரோ
என் தந்தையும் உன் தந்தையும்
எப்படி உறவினர்?
நானும் நீயும் எப்படி அறிந்தோம்?
செம்மண்ணில் மழைநீர் போல்
அன்பு நெஞ்சங்கள் கலந்துவிட்டனவே.
வேறு மொழி இலக்கிய மேற்கோள்கள், வெளிநாடுகளில் யாரோ சொன்ன மேற்கோள்களைப் பதிவிடுபவர்களுக்கு மத்தியில் 'குறுந்தொகை' பாடல் ஒன்றை மேற்கோள் காட்டி ஆச்சரியப்படுத்தியுள்ளனர் நாகசைதன்யா, சோபிதா.