இன்றைய ரிலீஸ் - 10 படங்களில் 1 மட்டும் மிஸ்ஸிங் | இதயம் முரளி ஆக மாறிய அதர்வா | ரேவதி இயக்கத்தில் பிரியாமணி, ஆரி புதிய வெப் தொடர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தின் 'கண்ணாடி பூவே' பாடல் வெளியீடு | விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் | லாபத்தில் நுழைந்த 'தண்டேல்' | மார்வெல் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் 'கேப்டன் அமெரிக்கா - பிரேவ் நியூ வேர்ல்டு' | சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ் | லூசிபர் 2ம் பாகத்திலும் அதிக முக்கியத்துவம் : நடிகை நைலா உஷா பெருமிதம் | மே மாத ரிலீஸுக்கு தயாராகும் பஹத் பாசிலின் 'ஓடும் குதிர சாடும் குதிர' |
நடிகர் மோகன்லால் தற்போதும் கைவசம் நான்கு படங்கள் வைத்துக் கொண்டு பிசியாக நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் முதன்முறையாக இயக்குனராக மாறி தான் இயக்கியுள்ள பரோஸ் படத்தை இயக்கி முடித்து வரும் செப்டம்பரில் அதை ரிலீஸ் செய்யும் வேலைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். வரலாற்று படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு வந்து தான் சேர்த்த சொத்துக்களை பதுக்கி வைத்து மறைந்த நிலையில் அதை பாதுகாக்கும் பாதுகாவலன் கதாபாத்திரத்திலும் மோகன்லால் நடித்துள்ளார்.
தற்போது பிரித்விராஜ் இயக்கத்தில் தான் நடித்து வரும் லூசிபர் இரண்டாம் பாகமான எம்புரான் படத்தின் படப்பிடிப்பு குஜராத்தில் நடைபெற்று வந்த நிலையில் அதை முடித்துவிட்டு நேரடியாக மும்பை வந்தார் மோகன்லால். அங்கே பரோஸ் படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுடன் இணைந்து மும்பையில் உள்ள முக்கிய புள்ளிகளுக்காக அங்கே உள்ள பிவிஆர் திரையரங்கில் பரோஸ் படத்தின் டிரைலரை திரையிட்டு காட்டியுள்ளார் மோகன்லால். இது படத்தின் ஓடிடி மற்றும் ஹிந்தி உரிமை தொடர்பான வியாபாரத்திற்காக என்று சொல்லப்படுகிறது. ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக வரும் செப்டம்பரில் இந்த படம் வெளியாக இருக்கிறது.