ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
மலையாளத்தில் சமீப வருடங்களில் வளர்ந்து வரும் இளம் நடிகராக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் நடிகர் மேத்யூ தாமஸ். தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தில் விஜய் மற்றும் திரிஷாவின் மகனாக நடித்திருந்தவர் இவர்தான். அது மட்டுமல்ல மாளவிகா மோகனனுக்கு ஜோடியாக நடித்தும் பரபரப்பு வளையத்திற்குள் வந்தவர். தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் மேத்யூ தாமஸின் குடும்பத்தினர் மற்றும் சில உறவினர்கள் ஒரு விசேஷ நிகழ்வில் கலந்து கொண்டு ஜீப்பில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். காரை மேத்யூ தாமஸின் சகோதரர் ஓட்டி வந்துள்ளார். அப்போது கொச்சின் அருகில் உள்ள நெடுஞ்சாலையில் சாஸ்தா முகை என்கிற இடத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கியது.
காரில் பயணித்தவர்கள் அனைவரும் படுகாயம் அடைந்த நிலையில் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இவர்களது 61 வயதான உறவினர் ஒருவர் உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேத்யூ தாமஸ் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருவதால் இவர்களுடன் செல்லவில்லை என்பது தெரிய வந்துள்ளது.