மோசமான தோல்வியை சந்தித்த 'ஏக் தின்' | 'கருப்பு' ரிலீஸ் சிக்கலா? முன்பதிவு டல்லா? | லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படத்தில் பூஜா ஹெக்டே! | 'ஜனநாயகன்' பட ஓடிடி உரிமையை கைப்பற்ற போட்டி போடும் நிறுவனங்கள்! | நெல்சனால் தள்ளிப்போகும் 'ஜெயிலர் 2' படம்! | ஆகஸ்ட் மாதத்தை குறிவைத்த சூரியின் 'மண்டாடி' | அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுப்பைத் தொடரும் விஜய் அரசு | நீதி கிடைக்க வேண்டும்; இசையமைப்பாளர் மீது குற்றம்சாட்டிய ஸ்வாகதா பதிவு | 'கருப்பு' வியாபாரம், கசிந்த தகவல்… | சட்டசபையில் சனாதனம் பற்றிய உதயநிதியின் பேச்சு: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி |

ராகவா லாரன்சை ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் அற்புதன். நடன இயக்குனராக இருந்த லாரன்ஸ் அறிமுகமான 'அற்புதம்' படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு ஷாம் நடித்த 'மனதோடு மழைக்காலம்' படத்தை இயக்கினார். இரண்டு படங்களுமே போதிய வரவேற்பை பெறாததால் தெலுங்கு பக்கம் சென்றவர் அங்கு உதய்கிரண் நடித்த 'செப்பவே சிறுகாளி' என்ற படத்தை இயக்கினார்.
அதன்பிறகு சினிமா வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவை விட்டு விலகி இருந்தார். விருகம்பாக்கத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்த அற்புதன் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மோட்டர் சைக்கிளில் சென்றபோது அதன் மீது கார் மோதி விபத்துக்குள்ளானார். தலையில் பலத்த காயம் அடைந்த அற்புதன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை நடந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 53. அற்புதனுக்கு ஜாஸ்மின் என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளனர்.