புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த வருடம் மூன்று படங்களில் நடித்த நிலையில் இந்த வருடம் அவரது நடிப்பில் சைரன் என்கிற படம் வெளியானது. இதை அடுத்து ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி மற்றும் ஹிந்தியில் பேபி ஜான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி சோசியல் மீடியாவில் தொடர்ந்து தன்னை பற்றியும் தனது படங்கள் பற்றியும் அப்டேட்டுகளையும் கொடுத்து வருகிறார். இன்னொரு பக்கம் விதவிதமான உடைகள் மற்றும் ஆபரணங்களை அணிவதில் விருப்பம் கொண்ட கீர்த்தி சுரேஷ் அவற்றையும் ரசிகர்களுக்கு காட்சிப்படுத்த தவறுவதில்லை.
மேலும் வித்தியாசமான புதுமையான ஒப்பனைகளையும் செய்து கொள்வதில் ஆர்வம் கொண்டவர் கீர்த்தி சுரேஷ். அந்த வகையில் தற்போது தனது ஹேர்ஸ்டைலை சுருள் வடிவத்திற்கு மாற்றிக் கொண்டுள்ள கீர்த்தி சுரேஷ், அதே தோற்றத்தில் விமான நிலையத்திற்கு வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இது ஹிந்தியில் இவர் நடிக்கும் பேபி ஜான் படத்திற்கான புதிய தோற்றம் என்றும் சொல்லப்படுகிறது.